பராமரிப்பு பணி நடந்ததால் பறக்கும் ரயில் சேவை 8 மணி நேரம் முடங்கியது

பராமரிப்பு பணி நடந்ததால் பறக்கும் ரயில் சேவை 8 மணி நேரம் முடங்கியது
Updated on
1 min read

சென்னை கடற்கரை வேளச்சேரி இடையே நேற்று பராமரிப்புப் பணிகள் நடந்ததால் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையில் பறக்கும் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால், ரயில் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

சென்னை கடற்கரை வேளச்சேரி இடையே தினமும் 132 சர்வீஸ் மின்சார ரயில்கள் இயக் கப்படுகின்றன. பெரும்பாலும் 20 நிமிடங்களுக்கு ஒரு மின்சார ரயில் இயக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழ மைகளில் 96 சர்வீஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இந்நிலையில் நேற்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையில் தொ டர்ந்து 8 மணி நேரத்துக்கு பரா மரிப்புப் பணிகள் நடைபெற்றன. இதனால், சென்னை கடற்கரை வேளச்சேரி இடையே மொத்தம் 50 சர்வீஸ்கள் ரத்து செய்யப்பட் டதால், 8 மணி நேரத்துக்கு பறக் கும் ரயில் சேவை முடங்கியது. ரயில் சேவை ரத்து குறித்த தகவல் தெரியாத பயணிகள் சிலர், பறக் கும் ரயில் நிலையங்களுக்கு வந்து ஏமாற்றம் அடைந்தனர்.

இது தொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, ‘‘மாநகரில் முக்கியமான ரயில் சேவையாக பறக்கும் ரயில் வசதி இருக்கிறது. தினமும் இதை நம்பித்தான் பல ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். பராமரிப்பு பணிகள் என கூறி, ஒரே நாளில் தொடர்ந்து 8 மணிநேரம் ரயில் சேவையை ரத்து செய்வதால், பய ணிகள் கடுமையாக அவதிப்படு கிறார்கள்’’என்றனர்.

7-ம் தேதியும்..

இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘‘சென்னை கடற்கரை வேளச்சேரி இடையே ரயில் பாதைகளின் திறனுக்கு ஏற்றவாறு தொடர்ந்து பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். மற்ற நாட்களில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டால் பெரிய அளவில் மக்களை பாதிக்கும் என்பதால், ஞாயிற்றுக்கிழமைகளில் பணி களை மேற்கொள்கிறோம். வரும் 7-ம் தேதியும் (ஞாயிறு) காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் பராமரிப்புப் பணிகள் நடைபெறும். அப்போதும் 50 சர்வீஸ்கள் ரத்து செய்யப் படும் ’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in