

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங் களில் சுகாதாரத் துறை மூலம் ரூ.13 கோடியே 40 லட்சம் மதிப்பிலும், சமூகநலத் துறை சார்பில் ரூ.2 கோடியே 1 லட்சம் மதிப்பிலும் கட்டப்பட்ட கட்டிடங் களை முதல்வர் எடப்பாடி கே.பழனி சாமி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அரசு மருத்துவமனை யில் ரூ.3 கோடி மதிப்பில் 20 படுக்கைகள் கொண்ட பிரிவு, 10 படுக்கைகள் கொண்ட அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய கவனிப்பு பிரிவு, 10 படுக்கைகள் கொண்ட குழந்தைகள் பிரிவு ஆகியவை கட் டப்பட்டுள்ளன. இவற்றை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.1 கோடியே 20 லட்சத்தில் மகப்பேறு புற நோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சைக்கு பிந்தைய கவனிப்பு பிரிவு, கதிர்வீச்சு பிரிவு, தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, ரத்த வங்கி ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.
ஆரம்ப சுகாதார நிலையம்
வேலூர், திருவள்ளூர், விழுப் புரம், நெல்லை, விருதுநகர், தஞ்சை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டப்பட்ட மற்றும் தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களையும் முதல்வர் திறந்துவைத்தார். திறக்கப் பட்ட கட்டிடங்களின் மதிப்பு ரூ.13 கோடியே 40 லட்சம்.
தமிழக சமூகநலத் துறை சார்பில் பெரம்பலூரில், பணிபுரியும் மகளிருக்கான அரசு விடுதி ரூ.1 கோடியே 1 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.
துயில் கூடம்
காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் சேவை இல்ல வளாகத்தில், 80 மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.1 கோடியில் துயில்கூடம் கட்டப்பட்டுள்ளது. இவற்றையும் முதல்வர் கே.பழனி சாமி தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் அமைச் சர்கள் சி.விஜயபாஸ்கர், ஜி.பாஸ் கரன், வி.சரோஜா, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், துறை இயக்குநர் குழந்தைசாமி, மாநில நலவாழ்வு குழும இயக்குநர் டேரேஸ் அகமது, சமூகநலத் துறை செயலர் கே.மணிவாசன், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலர் முகமது நசிமுதீன், மாற்றுத் திறனாளிகள் மாநில ஆணையர் ஆஷிஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய் திக்குறிப்புகளில் தெரிவிக்கப் பட்டுள்ளது.