சொகுசு விடுதியில் தங்கியுள்ள எம்எல்ஏக்களுடன் சசிகலா ஆலோசனை - இன்று முக்கிய முடிவு: செங்கோட்டையன் தகவல்

சொகுசு விடுதியில் தங்கியுள்ள எம்எல்ஏக்களுடன் சசிகலா ஆலோசனை - இன்று முக்கிய முடிவு: செங்கோட்டையன் தகவல்
Updated on
1 min read

கூவத்தூர் தனியார் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களை சசிகலா நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்பகுதியில் நூற்றுக் கணக்கான போலீஸார் குவிக்கப் பட்டனர். ஆளுநரிடம் இருந்து இன்று அழைப்பு வராதபட்சத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என அதிமுகவின் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செங்கோட்டையன் தெரிவித்தார்.

முதல்வர் பன்னீர்செல்வத்தின் அணியில் அதிமுகவினர் சேர்ந்து வருவதால் அதிமுகவில் பல்வேறு திருப்பங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில், எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள கூவத்தூர் தனியார் சொகுசு விடுதிக்கு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நேற்று நேரில் வந்தார். அங்கு, மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் சுமார் ஒருமணி நேரம் ஆலோசனை நடத்தினார். பின்னர், மாவட்ட செய லாளர்களை வெளியேற்றிவிட்டு எம்எல்ஏக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இதில், 40-க்கும் மேற்பட்ட எம்எல் ஏக்கள் அதிமுகவின் நிலை குறித்து அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அவர்களை அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் செல்லூர்ராஜூ ஆகியோர் சமாதானப்படுத்தியதாக தெரிகி றது. எனினும், எம்எல்ஏக்கள் தங்களின் நிலைப்பாட்டை தெரி விக்கவில்லை எனக் கூறப்படு கிறது. இதனிடையே, மாமல்லபுரம் அடுத்த பூந்தண்டலம் பகுதியில் 18 எம்எல்ஏக்கள் தங்கவைக்கப் பட்டுள்ளதாக செய்தி வெளி யானது.

இவர்களிடம், திவாகர் மற்றும் சசிகலாவின் கணவர் நடராஜன் பேச்சு வார்த்தை நடத்தியாகவும், எனினும், முக்கிய முடிவுகள் ஏதும் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. முன்னதாக கூவத் தூர் வந்த சசிகலாவிடம், கிராமப் பகுதியில் நிலவும் பதற்றமான சூழ்நிலை தொடர்பாக முறை யிடப்போகிறோம் என அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் விடுதியை நோக்கி சென்றனர்.

இதையடுத்து அப்பகுதியில் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். கிராம மக்களை அவர்கள் தடுத்து நிறுத்தினர். காஞ்சிபுரம் அதிமுக மத்திய மாவட்ட செயலாளர் ஆறுமுகம் கிராம மக்களை சமாதானப் படுத்தினார்.

ஆட்சியமைப்பது தொடர்பாக ஆளுநரிடம் நேற்றும் கடிதம் அளிக்கப்பட்டுள்ளதால், இன்று காலை வரை காத்திருந்து முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக அதிமுகவின் அவைத் தலைவ ராக நியமிக்கப்பட்டுள்ள செங் கோட்டையன் தெரிவித்தார்.

செங்கோட்டையன் நேற்று மாலை கூவத்தூரில் செய்தியாளர் களை சந்தித்தார். அப்போது, “அதிமுகவின் நிலை குறித்து ஊடகங்கள் தவறான தகவல்களை வெளியிட்டு வருகின்றன. நான் முதல்வர் பதவி ஏற்க உள்ளதாகவும் செய்தி வெளியிடப்படுகிறது. இந்த தகவல்களில் சிறிதும் உண்மை யில்லை. ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநரிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆளுநரிடம் இருந்து இன்று காலை அழைப்பு வரும் என எதிர் பார்க்கிறோம். அழைப்பு வராத பட்சத்தில் அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும்” என்றார். பொன் னையன் முதல்வர் பன்னீர்செல்வம் அணியில் சேர்ந்தது குறித்து கேட் கப்பட்டதற்கு, பதில் அளிக்காமல் சிரித்துக்கொண்டே செங்கோட் டையன் புறப்பட்டு சென்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in