

ரம்ஜான் பண்டிகையையொட்டி சட்டப்பேரவைக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
துறைவாரியான மானி யக் கோரிக்கைகளை நிறைவேற்று வதற்காக தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. கடந்த 9 நாட்களில் 23 துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்பட்டு, துறைகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பேரவைக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக் கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக் கிழமை, நாளை (திங்கட்கிழமை) ரம்ஜான் பண்டிகை என்பதால், பேரவைக்கு விடுமுறை அளிக் கப்பட்டுள்ளது. செவ்வாய்க் கிழமையும் கூடுதலாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பேரவை மீண்டும் புதன்கிழமை கூடுகிறது. அன்றைக்கு நெடுஞ் சாலை, பொதுப்பணித் துறை மானி யமும், வியாழக் கிழமை கைத்தறி, கதர் கிராமத் தொழில்கள் மானியமும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
ஜூன் 30-ம் தேதி (வெள்ளிக் கிழமை) மதுரையில் அரசு சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடப்பதால் பேரவைக் கூட்டம் இல்லை. தொடர்ந்து சனி, ஞாயிறு இரு தினங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.