காவல்துறை உதவி ஆணையர்கள் 4 பேருக்கு கூடுதல் பொறுப்பு

காவல்துறை உதவி ஆணையர்கள் 4 பேருக்கு கூடுதல் பொறுப்பு
Updated on
1 min read

காவல்துறை உதவி ஆணையர்கள் 4 பேருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளன.

ஆர்.கே நகர் இடைத் தேர்தலை முன்னிட்டு காவல்துறை உதவி ஆணையர்களான வண்ணாரப்பேட்டை கே.அனந்த குமார், திருவொற்றியூர் என்.குமார், எம்கேபி நகர் சி.ஜெயசிங், ராயபுரம் பி.ஸ்டீபன் ஆகியோரை தமிழக டிஜிபி டி.கே. ராஜேந்திரன் இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். 4 பேரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், காலியாக உள்ள அந்த பணி இடங்களை கூடுதலாக கவனிக்க உதவி ஆணையர்களுக்கு சென்னை காவல் ஆணையர் கரன் சின்கா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, உதவி ஆணையராக இருக்கும் துறைமுகம் அர்னால்டு ஈஸ்டர் கூடுதலாக வண்ணாரப்பேட்டையை கவனித்துக் கொள்வார்.

அதேபோல் பல்லாவரம் உதவி ஆணையர் விமலன் கூடுதலாக திருவொற்றியூரையும், தரமணி உதவி ஆணையர் சுப்பராயன் எம்கேபி நகரையும், அண்ணா நகர் உதவி ஆணையர் சந்திரசேகர் ராயபுரத்தையும் கூடுதலாக கவனித்துக் கொள்வார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in