ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: டிஜிபி, கமிஷனருடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: டிஜிபி, கமிஷனருடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை
Updated on
1 min read

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பாதுகாப்பு, தேர்தல் நடவடிக்கை கள், விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் ஆகி யவை தொடர்பாக தமிழக டிஜிபி, சென்னை காவல் ஆணையர் மற்றும் மாநகராட்சி ஆணையரு டன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 12-ம் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடு களை தமிழக தேர்தல் துறை செய்து வருகிறது. மாவட்ட தேர்தல் அதிகாரியான மாநகராட்சி ஆணை யர் கார்த்திகேயன், தேர்தல் அலுவ லர் பிரவீன் நாயர் ஆகியோர் வாக்குச்சாவடி அமைத்தல், பணி யாளர்கள் நியமனம், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான பணி களைக் கவனித்து வருகின்றனர்.

இந்நிலையில் வறட்சி நிவார ணம், கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். இவர்களுக்கு ஆதர வாக தமிழகத்தில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்று வரு கின்றனர். காவல்துறையினர் கட்டுப் பாடுகள் விதித்தபோதும் அவர் களின் முயற்சிகள் தொடர்கின்றன.

எனவே, ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் மற்றும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கள மிறங்கும் மாணவர்கள் ஆகிய விஷயங்கள் தொடர்பான ஆலோ சனைக் கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில், தலைமைச் செய லாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் நடந்தது. இதில், தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை பெருநகர காவல் ஆணையர் கரண் சின்ஹா, மாநகராட்சி ஆணையரும் தேர்தல் அதிகாரியுமான கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு கோரப்பட வேண்டிய துணை ராணுவப்படை, பாதுகாப்பு ஏற்பாடுகள், சிசிடிவி கண்காணிப்பு உள்ளிட்ட விஷயங் கள் விவாதிக்கப்பட்டன. மேலும், மாணவர்கள் போராட்டம் தொடர்பாக வும் ஆலோசனை நடத்தப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in