

தமிழகம் முழுவதும் குடிசை மாற்று வாரியம் மூலம் 23,476 அடுக்கு மாடி, தனி வீடுகள் இந்த ஆண்டில் கட்டுவதற்கு முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார்.
அத்தியாவசிய தேவையான வீட்டு வசதியை அனைத்து தரப்பு மக்களும் பெறும் வகையில், தமி ழகத்தில் பல்வேறு வீட்டு வசதி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக வீட்டுவசதி வாரியம், குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம் பல ஆயிரம் குடி யிருப்புகள் கட்டப்பட்டு வரு கின்றன.
நகரப் பகுதிகளில் கடந்த 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 14.63 லட்சம் குடும்பங்கள் குடிசைகளில் வாழ்வதாக கணக்கிடப்பட்டுள் ளது. இதில் 12 மாநகராட்சிகளில் 7.53 லட்சம் குடும்பங்களும் 124 நகராட்சிகளில் 4.68 லட்சம் குடும்பங்களும் வசிக்கின்றன. மேலும், மொத்தமுள்ள 528-ல் கணக்கெடுக்கப்பட்ட 328 பேரூ ராட்சிகளில் 2.42 லட்சம் குடும்பங் கள் குடிசையில் வசிக்கின்றன.
இவர்களுக்கு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் பல்வேறு திட் டங்களில் வீடுகள் வழங்கப்படு கின்றன. ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டம், அனைவருக்கும் வீட்டு வசதி திட்டம், புதிய குடியிருப்பு கள் கட்டுதல், 13-வது நிதிக்குழு திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் இப்பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன.
இந்நிலையில், இந்த ஆண்டுக் கான குடிசைப்பகுதிகளில் வாழும் மக்களுக்கான அடுக்குமாடி குடி யிருப்புகள் மற்றும் தனி வீடுகள் திட்டத்துக்கான ஒப்புதலை முதல் வர் ஜெயலலிதா நேற்று வழங்கி யுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை மற்றும் பிற நகரங் களில், கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களின் கீழ், 59,023 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகளை குடிசைப் பகுதி மாற்று வாரியம் கட்டியுள்ளது. மேலும், 3,024 அடுக்குமாடி குடியிருப்புகள், 7,513 தனி வீடுகள் என மொத்தம் 10,537 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு, குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம் 23,476 அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள் கட்ட முதல்வர் ஜெயலலிதா அனுமதி அளித்துள்ளார். இதில் 7,204 அடுக்குமாடி குடியிருப்புகள் சென்னை, தஞ்சை, திருச்சி, ஈரோடு, கோவை, புதுக்கோட்டை, நாமக் கல் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் கட்டப்படுகிறது. பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு அவர்களது சொந்த வீட்டு மனைகளில் சென்னை, வேலூர், ஓசூர், ராணிப்பேட்டை, விருதுநகர், மதுரை மற்றும் 157 பேரூராட்சிகளில் 16,272 தனி வீடுகள் கட்டப்படும்.
அடுக்குமாடி குடியிருப்புகள் ஒவ்வொன்றும் 400 சதுரடி கட்டிட பரப்பில், ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை. சமையலறை, பால்கனி, குளியலறை மற்றும் கழிவறை ஆகியவற்றை கொண்ட தாக அமையும். தனி வீடுகள் ஒவ் வொன்றும் 300 சதுரடி தரைப் பரப்பில் பயனாளிகள் தாங்களே கட்டிக்கொள்ள வழிவகை செய்யப் படும். தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம், தேவையான தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை வழங்கும். தனி வீடுகள் கட்டிக் கொள்பவர்களுக்கு அரசு மானியம் ரூ.2.10 லட்சம் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.