

பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய இந்தியாவின் முக்கிய நகரங்களில் பெரியவர்கள் வன்கொடுமைக்குள்ளாவதாக இந்திய ஹெல்ப்ஏஜ் ஆய்வு தெரிவித்துள்ளது.
சென்னையில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் அனுபவம் மரியாதைக் குறைவதாகவும் பொது வெளிகளில் மோசமாக நடத்தப்படுவதாகவும் இந்தக் ஆய்வு தெரிவிக்கிறது. ஒரு பொதுநல அறக்கட்டளை அமைப்பான ஹெல்ப்ஏஜ் நடத்திய இந்தியாவின் நாடு தழுவிய ஆய்வின் அடிப்படையில் இந்த உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன.
2011ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் 60க்கும் அதற்கும் மேலான வயதுள்ளவர்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 10.4 சதவீதம். இது அவசர கவனம் மேற்கொள்ளத்தக்க ஒரு பிரச்சனை என நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மூத்தகுடிகளை இந்தியா எப்படி நடத்துகிறது?
மூத்தக் குடிமக்கள் அவமதிப்பு ஒழிப்பு விழிப்புணர்வுநாள் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு தி ஹெல்ப்பேஷ் இந்தியா 'மூத்தகுடிகளை இந்தியா எப்படி நடத்துகிறது' என்ற ஆய்வறிக்கை நேற்று வெளியிட்டுள்ளது.இந்த கணக்கெடுப்பு இந்திய அளவில் முதல் தரம் இரண்டாம் தரம் மூன்றாம் தரம் என்ற வரிசையில் அமையப்பெற்ற 19 நகரங்களில் நடைபெற்றது.
இதில் 4,615 பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஒரு வடிவமைக்கப்பட்ட கேள்வித்தாள் வாயிலாக இவர்கள் அனைவரும் நேர்காணல் செய்யப்பட்டனர். அப்போது, சென்னையில் 49 சதவீத மூத்தகுடிமக்கள் அவர்களின் வயது காரணமாகவே மரியாதைக்குறைவாக நடத்தப்பட்டதாக தெரிவித்தனர். பெங்களூரில் இந்த சதவீதம் 70 சதவீதமாக உயர்ந்தது.
இதைத் தொடர்ந்து ஹைதராபாத் 60 சதவீதமாகவும், குவஹாத்தி 59 சதவீதமாகவும் மற்றும் 52 சதவீதமாகவும் இருப்பது தெரியவந்துள்ளது. மும்பையில் நடத்தப்பட்ட நேர்காணலில் சென்னைக்கும் குறைவாக 33 சதவீதமாக இருப்பதை அறியமுடிந்தது.
ஆய்வில் அம்சங்கள்
இந்த கணக்கெடுப்பு இந்த ஆண்டில் நம் நாட்டில் பொதுவெளிகளில் பெரியவர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதையே எடுத்துக்காட்டுகிறது. இந்த ஆய்வு நான்கு முக்கியப் பகுதிகளை உள்ளடக்கியது:
1. பொதுமக்களிடமும் சமூக ஆர்வலர்களிடமும் சில தேவைகள் கருதி பேசும்போது மூத்தகுடிமக்களுக்கு ஏற்பட்ட நேரடி அனுபவங்கள்
2. மூத்தகுடிமக்கள் மரியாதைக் குறைவாக நடத்தப்படும்பொழுது அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள், அவர்களது உணர்வு எத்தகையதாக இருக்கிறது;
3. வீட்டை விட்டு வெளியே வரும்போது அந்தப் பெரியவர்களின் பொதுவான மனநிலை;
4. சமுதாயத்திலிருந்து முதியோர்களது எதிர்பார்ப்புகள் என்னென்ன என்பதுகுறித்த ஒரு விருப்பப் பட்டியல்.
வீட்டில் கௌரவக் குறைவாக......
இதே அமைப்பு, தனது முந்தைய ஆய்வின் வழியாக நாட்டில் உள்ள 50 சதவீத மூத்தகுடிமக்கள் வீட்டிலேயே கௌரவக்குறைவாக நடத்தப்பட்டதாக கண்டறிந்தது. இந்த எண்ணிக்கை பொதுவெளிகளில் மூத்த குடிமக்கள் மரியாதைக்குறைவாக நடத்தப்படும் சதவீதத்திற்கு கிட்டத்தட்ட நெருங்கிவருகிறது: 44 சதவீதம்.
காய்கறிக்கடைக்காரர்கூட மதிப்பதில்லை
சென்னையில், சாதாரண காய்கறி கடைகளில் கூட பில்போட வரிசையில் நிற்கும்போது பின்தள்ளப்பட்டு கடைசியாக வாங்கிச் செல்லும் நிலை ஏற்படும்விதமாக மற்ற வாடிக்கையாளர்களால் தவறாக நடத்தப்படுவதாக 22 சதவீத மூத்த குடிமக்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி 25 சதவீத மூத்த குடிமக்கள் தங்களை வியாபாரிகளே பலநேரம் மோசமாக நடத்துவதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கு மால் ஊழிகளும் விதிவிலக்கல்ல: 17 சதவீத பெரியவர்கள் கூறும்போது தாங்கள் மால்களில் கொடுமையாக நடத்தப்படுவதைப் பற்றி கூறினர். இந்த ஆய்வு மருத்துவமனைகள், பேருந்துகளில் உள்ளடக்கித்தான் நடைபெற்றது. அங்கெல்லாம் மூத்த குடிமக்கள் தாங்கள் என்னவிதமான ஆடைகள் அணிந்துள்ளார்கள் என்பதைப் பொறுத்து அணுமுறை இருந்துள்ளது.
நல்ல ஆடை அணியவில்லையெனில்...
இந்திய அளவில் 53 சதவீத பெரியவர்கள் பொதுவெளிகளில் பாரபட்சமாக நடத்தப்படுவதைப் பற்றி 53 சதவீத பெரியர்வர்களும், மக்கள் தங்கள் தாமதமான செயல்களைக் கண்டு பலர் பொறுமையிழந்ததைப் பற்றி 61 சதவீத பெரியவர்களும், மக்கள் நன்றாக ஆடை அணியாதவர்களைப் பார்த்தால் முரட்டுத்தனமாக நடந்துகொள்வதாகவும் 52 சதவீதப் பெரியவர்களும் தெரிவித்துள்ளனர்.
பெரியவர்கள் அவமதிப்புக்குள்ளாவது இரண்டாம்தர நகரங்களை ஒப்பிடும்போது மெட்ரோபாலிட்டன் நகரங்களில் அதிகமாகக் காணப்படுகிறது என்கிறார் ஹெல்ப்ஏஜ் இந்தியா அமைப்பின் தமிழ்மாநிலத் தலைவர் வி. சிவக்குமார். தமிழகத்தில் காஞ்சிபுரமும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதில் மற்றுமொரு நகரமாக இருந்தது.
தேசிய முதியோர் மையம்
விரைவில், சென்னை மருத்துவக் கல்லூரி சார்பாக முதியோர்களுக்காக ஒரு சிறந்த காப்பகம் ஒன்று தொடங்கப்பட உள்ளது.
இக்கல்லூரியின் மூப்பியல் துறைப் பிரிவுத் தலைவர் சிவக்குமார் முதியோர் அவமதிப்புப் பற்றி கூறும்போது, பெரியவர்களுக்கான வன்கொடுமை என்பது உடலியல் ரீதியாக இருக்கலாம். மனம் சம்பந்தப்பட்டும் இருக்கலாம். பொருளாதாரத் தேவையின்பாற்பட்டதாகவும் இருக்கலாம். ஆனால் இது சமுதாயத்தில் பரவலாக உள்ளது. நம்மிடையே இதற்கான கவனம் கூடுதலாக இருக்கவேண்டும் என்பதுதான் உண்மை'' என்றார்.
சென்னையில் தேசிய முதியோர் தடுப்புமையம் தொடங்கப்பட உள்ளதைப் பற்றி சென்னை மருத்துவமனை டீன் ஆர்.நாராயணபாபு தெரிவிக்கையில்,
''சென்னையில் தடுப்பு மருந்துக்காக கிண்டியில் இயங்கிவரும் அரசு கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்திலேயே ரூ.125 கோடி செலவில் அமைக்கப்பட்டுவரும் 'தேசிய முதியோர் மையம்' கட்டிடப் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த மையம் 2018ல் திறக்கப்பட உள்ளது. இந்த முதியோர் இல்லத்தில் அனைத்து சிறப்புப் பிரிவுகளும் ஒரு கூரையின்கீழ் இடம்பெற உள்ளது. ஆய்வு மையம் ஒன்றும் இதன் ஒரு பகுதியாக செயல்பட உள்ளது'' என்று கூறினார்.
முதியவர்களைக் காப்போம்
கடந்த ஆண்டு, ஹெல்ப்ஏஜ் இந்தியா அமைப்பு, துன்பப்படும் முதியவர்களுக்காக வேண்டி, 'முதியவர்களைக் காப்போம்' என்ற கட்டணமற்ற இலவச சட்டஉதவிக்கான தொலைபேசி சேவையைதொடங்கியது குறிப்பிடத்தக்கது.
ஒருகாலத்தில் நாமும் குழந்தைகளாக இருந்தபோது இந்தப் பெரியவர்கள் இளமையாக இருந்தபோது அவர்களைப் பார்த்து வியந்திருக்கிறோம். வளர்ந்தபிறகு இன்று நாம் அவர்களை அவமதிக்கவும் வன்கொடுமை செய்யவும் துணிகிறோம். நிச்சயம் ஒருநாள் நாமும் வயதானவர்களாக ஆவோம். அன்று நமக்கு உதவிசெய்ய யாராவது வரமாட்டார்களா என ஏங்குவோம். அதற்குமுன் நம்மால் முடிந்த உதவிகளை செய்து முதியவர்களைக் காப்போம். குறைந்தபட்சம் அவர்களை அவமதிக்காமல் இருப்போம்.
(இன்று முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினம்)
தமிழில்: பால்நிலவன்