

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு, டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1, குரூப்-2, வி.ஏ.ஓ. உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அண்ணா ஐ.ஏ.எஸ். அகாடமி இலவசப் பயிற்சி அளித்து வருகிறது.
இதில் 50 சதவீத இடங்கள் கிறிஸ்தவ, முஸ்லிம் சிறுபான்மையினர், எஸ்.டி. வகுப்பினருக்கு அவர்களது கல்வித் திறமைக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பயிற்சி வகுப்புகள் மார்ச் 30-ம் தேதி தொடங்கி 5 மாதங்கள் நடைபெற உள்ளன. முழு நேர வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரையும், பகுதி நேர வகுப்புகள் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும். பயிற்சியில் சேர விரும்புவோர் 9840259611 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று பயிற்சி மையத்தின் கவுரவ இயக்குநர் பேராசிரியர் எம்.எப்.கான் தெரிவித்துள்ளார்.