மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு

Published on

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

கேந்திரிய வித்யாலயா பள்ளி கள், நவோதயா வித்யாலயா பள்ளிகள், மத்திய திபெத்திய பள்ளிகள் உள்ளிட்ட மத்திய அரசு பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் நிர்வாக கட்டுப்பாட்டின்கீழ் செயல் படும் பள்ளிகளில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேருவதற்கு “சி-டெட்” எனப் படும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வை மத்திய இடை நிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆண்டுக்கு இரண்டு முறை (பிப்ரவரி, செப் டம்பர்) நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான சி-டெட் தகுதித் தேர்வு செப்டம்பர் 18-ம் தேதி நடத்தப்பட இருக்கிறது.

இதற்கு இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்த வர்களும், பி.எட். பட்டதாரிக ளும் விண்ணப்பிக்கலாம். இதற்கான ஆன்லைன் பதிவு (www.ctet.nic.in) கடந்த 22-ம் தேதி தொடங்கியது. ஜூலை 18-ம் தேதிக்குள் விண்ணப் பிக்க வேண்டும்.

தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை ஆகஸ்ட்17-ம் தேதிமுதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ள லாம் என்று சிபிஎஸ்இ அறி வித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in