பிளஸ் 2 மறுகூட்டல், மறுமதிப்பீடு: இணையத்தில் வெளியீடு

பிளஸ் 2 மறுகூட்டல், மறுமதிப்பீடு: இணையத்தில் வெளியீடு
Updated on
1 min read

அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களில் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப் பெண் மாற்றம் உள்ளவர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் scan.tndge.in என்ற இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளது.

இந்த பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத் தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை.

மதிப்பெண் மாற்றம் உள்ள வர்கள் அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.nic.in) தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு திருத் தப்பட்ட மதிப்பெண் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றி தழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in