அதிமுக-வின் கொண்டாட்டம் தொடரட்டும்: சுப்பிரமணியன் சுவாமி

அதிமுக-வின் கொண்டாட்டம் தொடரட்டும்: சுப்பிரமணியன் சுவாமி
Updated on
1 min read

ஜெயலலிதா விடுதலை செய்யப்படாத நிலையில் அதிமுக-வினர் கொண்டாடி வருகின்றனர். அவர்களில் கொண்டாட்டம் தொடரட்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

ஜாமீனில் விடுவிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் ஹெச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு மாலை 5 மணி அளவில் வந்தடைந்தார்.

அவரது வருகைக்காக சென்னை விமான நிலையம் தொடர்ந்து அவரது இல்லம் அமைந்திருக்கும் போயஸ் கார்டன் வரை மனித சங்கிலி அமைத்து ஜெயலலிதாவுக்கு அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர்.

இதனை பாஜக முக்கியத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சிக்கும் விதமாக அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது," ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டது போல அதிமுக-வினர் கொண்டாடி வருகின்றனர். அவர்கள் உற்சாகமாக கொண்டாடட்டும். உண்மை உச்ச நீதிமன்றத்தின் வழியாக டிசம்பர் 18-ஆம் தேதி வெளியாகும். அவர் ஜாமீனில் தான் விடுவிக்கப்பட்டுள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in