

ஆருப்பள்ளி மலையில் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய கற் திட்டைகள், கற்குவை, கல்வட்டம் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள் ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள ஆருப்பள்ளி மலையில் வரலாற்று ஆர்வலரும், ஆசிரியர் பயிற்றுநருமான சுரேஷ், மேற்பரப்பாய்வு செய்தார். இதில், பெருங்கற்காலத்தைச் சேர்ந்த 3 கற்திட்டைகள், ஒரு கல்வட்டம், கல்வட்டத்துடன் கூடிய கற்குவை ஆகியவற்றை கண்டறிந்துள்ளார்.
இதுகுறித்து அவர் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:
பழங்கால இனக்குழு மக்கள் வாழ்வில் இறந்தவர் நினைவாக கல் அமைக்கும் வழக்கம் தொன்மை வாய்ந்த பல நாடுகளில் காணப்படுகிறது. இவ்வகை ஈமச் சின்னங்கள் அமைப்பதற்கு பெரிய கற்களைப் பயன்படுத்தி வந்துள்ள னர். இதனைக்கொண்டே இவ் வகை நாகரிக காலத்தை ‘பெருங் கற்காலம்’ என வரலாற்று ஆய்வி யலாளர்கள் வகைப்படுத்தி உள்ள னர். ஆங்கிலத்தில் இது ‘மெகாலித் திக்’ காலம் என அழைக்கப்படுகிறது. கிரேக்க மொழியில் ‘மெகா’ என்றால் பெரிய என்றும் ‘லித்திக்’ என்றால் கல் என்றும் பொருள்படும்.
ஆருப்பள்ளி மலையில் 3 கற்திட் டைகள் உள்ளன. இரு தாங்கு கற்களின்மேல் சாய்வாக மூடு கல்லை அமைத்துள்ளனர். தாங்கு கல்லின் எடையைவிட மூடுகல்லின் எடை பன்மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் அருகில் கல்வட்டம் ஒன்று சிதைந்த நிலை யில் காணப்படுகிறது. மிக உயர்ந்த கற்குவை ஒன்றும் உள்ளது. இக்கற்குவையைச் சுற்றிலும் கல்வட்டம் அமைக்கப்பட்டுள்ளது. கற்குவையானது சதுர வடிவில் 6 அடி உயரம் கல்வட்டம் எழுப் பப்பட்டு, அதன்மீது 6 அடி உயர கற்பலகை குத்துக்கல்லாக அமைக்கப்பட்டுள்ளது.
கற்குவையின் மேல் கிடை மட்டமாக கற்பலகை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. 12 அடி உயரம் காணப்படும் இக்கற்குவையே இம்மாவட்டத்தில் கண்டறியப்பட்ட கற்குவைகளில் உயரமானது. இவ்வாறு ஆசிரியர் சுரேஷ் தெரிவித்தார்.