தி இந்து செய்தி எதிரொலி: மாமல்லபுரத்தில் சுற்றுச்சூழலை காக்க பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தி இந்து செய்தி எதிரொலி: மாமல்லபுரத்தில் சுற்றுச்சூழலை காக்க பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - ஆக்கிரமிப்புகள் அகற்றம்
Updated on
1 min read

மாமல்லபுரம் சுற்றுலாத் தலத்தில் தடையை மீறி விற்பனை செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பேரூராட்சி ஊழியர்கள் நேற்று பறிமுதல் செய்தனர். பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுலா தலத்தின் சுற்றச்சூழல் மாசு ஏற்படுவதாக ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் செய்தி வெளியான நிலையில் பேரூராட்சி இந்த நடவடிக்கையை மேற்கொண் டுள்ளது.

மாமல்லபுரம் சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. கடற்கரை கோயில் மற்றும் குட வரை சிற்பங்களை காண நாள் தோறும் உள்ளூர் மற்றும் வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

தற்போது, பொதுத்தேர்வுகள் முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் சுற்று லாப்பயணிகளின் கூட்டம் அதி கரித்துள்ளது. இதனால், உள்ளூர் நபர்கள் வருவாய்க்காக வெண்ணை உருண்டை பாறை, அர்ஜூனன் தபசு உள்ளிட்ட இடங்களில் சாலை யோரங்களில் பிளாஸ்டிக் பொருட் களில் தின்பண்டங்களை அடைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால் சுற்றுலாத்தல வளாகத் துக்குள் பிளாஸ்டிக் கழிவுகள் வீசப்பட்டு சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கிறது. மேலும் ராயர் கோபுரம் அருகேயுள்ள பாறை குளத் தில் பிளாஸ்டிக் கழிவுகள் தேக்க மடைந்து குளம் மாசடைந்து வருகிறது. இதுகுறித்து கடந்த 23-ம் தேதி ‘தி இந்து’ தமிழ் நாளி தழில் புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

இதையடுத்து, மாமல்லபுரம் பேரூராட்சி ஊழியர்கள் சுற்றுலாத் தலம் மற்றும் அதனருகே உள்ள சாலையோர கடைகளில் விற்பனை செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட் களை பறிமுதல் செய்யும் பணி களில் நேற்று ஈடுபட்டனர். மேலும், சாலையோரங்களில் அமைக்கப் பட்ட கடைகளையும் அகற்றினர். அப்போது சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, மாமல்லபுரம் பேரூராட்சி வட்டாரங்கள் கூறும் போது, பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும்போதெல்லாம், ஆளுங் கட்சியைச் சேர்ந்தவர்கள் பணி செய்யவிடாமல் தடுக்கின்றனர். மீறினால் உடனடியாக பணி மாற்றம் செய்யப்படுகின்றனர் என தெரிவித்தன.

இதுகுறித்து, மாமல்லபுரம் போரூராட்சி அதிகாரி கூறும்போது, ‘பிளாஸ்டிக் பொருட் கள் பறிமுதல் செய்வதும். ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படுவதும் தொடரும்’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in