

கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக் களை சட்ட விரோதமாக அடைத்து வைத்திருந்ததாக மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் டிஜிபி அலுவலகத்தில் அளித்த புகார் தொடர்பாக, அவரிடம் மாமல்லபுரம் டிஎஸ்பி தலைமையிலான போலீ ஸார் நேற்று விசாரணை நடத்தினர்.
தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு முன்பாக கூவத்தூர் சொகுசு விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அவர் களுடன் தங்கியிருந்த மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சர வணன், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்தார்.
மேலும், ‘கூவத்தூர் விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் சட்ட விரோத மாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தாகவும், தான் மாறுவேடத்தில் தப்பி வந்ததாகவும்’ கூவத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச் செயலர் சசிகலா ஆகியோர் மீது ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக எம்எல்ஏ சர வணன் டிஜிபி அலுவலகத்திலும் புகார் தெரிவித்திருந்தார். அந்த புகார் விசாரணைக்காக பரிந்துரைக் கப்பட்டு மாமல்லபுரம் டிஎஸ்பி அலுவலகத்துக்கும், கூவத்தூர் காவல் நிலையத்துக்கும் அனுப்பப் பட்டது.
இதன் அடிப்படையில் மாமல்ல புரம் டிஎஸ்பி ஹெட்வர்ட் தலைமை யிலான போலீஸார் எம்எல்ஏ சர வணனை நேரில் விசாரிப்பதற்காக அழைத்திருந்தனர். முதலில் எம்எல்ஏ சரவணனுடன், வழக் கறிஞர் குழுவினர் மாமல்லபுரம் டிஎஸ்பி அலுவலகத்துக்கு வருவதாக இருந்தது. பின்னர், கல்பாக்கம் அணுமின் நிலைய விருந்தினர் மாளிகைக்கு வரும் படி அவருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மற்றும் வழக்கறிஞர் குழுவினர் கல்பாக்கம் வந்தனர். அவர்களிடம் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக டிஎஸ்பி ஹெட்வர்ட் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணை தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தரப்பைச் சேர்ந்த ஒருவரிடம் கேட்டபோது, ‘சட்டமன்ற உறுப்பினர் சரவணன் வழக்கறிஞர்கள் பாபு, மோகன ரங்கன், நாகேந்திரன் குழுவினருடன் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு வந்தார். போலீஸார் அவரை மட்டும் தனியாக அழைத்துச் சென்று டிஜிபி அலுவலகத்தில் கொடுத்துள்ள புகார் தொடர்பாக விசாரித்தனர். அவர் டிஜிபி அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாக என்ன புகார் கூறியிருந்தாரோ அதை அப்படியே காவல் துறையினரிடமும் தெரிவித் துள்ளார்’ என்றார்.
விசாரணை நடைபெற்ற இடத் தில் போலீஸார் கெடுபிடி அதிகமாக இருந்தது. புகைப்படக்காரர்கள், பத்திரிக்கையாளர்கள் என யாரும் அப்பகுதியில் அனுமதிக்கப்பட வில்லை. முதலில் மாமல்லபுரம் டிஎஸ்பி அலுவலகத்தில் விசா ரணை நடைபெறலாம் என கருதப்பட்ட நிலையில், அதிக பாதுகாப்பு கெடுபிடிகள் மிகுந்த கல்பாக்கம் அணுமின் நிலைய விருந்தினர் மாளிகையில் வைத்து போலீஸார் விசாரணை நடத்தினர்.