

கிரானைட் முறைகேடு தொடர் பாக மதுரை, மேலூர் நீதி மன்றங்களில் பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்டோருக்கு எதிராக 4 வழக்குகளில் 2500 பக்க குற்றப்பத்திரிகை நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
மதுரை மாவட்டம், மேலூர் பகுதிகளில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக மேலூர், ஒத்தக் கடை, கீழவளவு காவல் நிலையங்களில் 98 வழக்கு கள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் தொடர்பாக பிஆர்பி கிரானைட்ஸ் பங்கு தாரர் பி.ஆர்.பழனிச்சாமி உட்பட 60 பேர் கைது செய் யப்பட்டனர்.
இந்த 98 வழக்குகளில் இதுவரை 29 வழக்குகளில் நீதிமன்றங்களில் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் மேலும் 4 வழக்குகளில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
கீழவளவு பகுதியில் ரூ.961 கோடி மதிப்புள்ள கிரா னைட் கற்களை சட்டவிரோத மாக வெட்டி எடுத்தது தொடர் பாக பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கிலும், மேலூர் பகுதியில் ரூ.431 கோடி மதிப்புள்ள கிரானைட் கற்களை வெட்டி எடுத்தது தொடர்பாக பி.கே.செல்வ ராஜ் உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கிலும், கொட்டாம்பட்டி பகுதியில் ரூ.6.99 கோடி மதிப்புள்ள கிரானைட் கற்களை வெட்டி எடுத்தது தொடர்பாக ஆனந்த் உள்ளிட்டோர் மீது பதிவுசெய்த வழக்கிலும் மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நேற்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய் யப்பட்டது.
மேலூரைச் சேர்ந்த சுமதி என்பவருக்கு சொந்தமான ரூ.1.50 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங் கள் தயாரித்து அபகரித்தது தொடர்பாக பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட் டோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் மதுரை முதலா வது நீதித்துறை நடுவர் மன் றத்தில் நேற்று குற்றப்பத் திரிகை தாக்கல் செய்யப்பட் டது.
இந்த நான்கு வழக்கி லும் சுமார் 2500 பக்கங் கள் கொண்ட குற்றப்பத்திரி கையை அரசு வழக்கறிஞர் ஷீலா, தனிப்படை இன்ஸ் பெக்டர்கள் பிரகாஷ், ராஜா சிங் ஆகியோர் நீதிமன்றங் களில் தாக்கல் செய்தனர். எஞ்சிய 65 வழக்கிலும் இந்த மாத இறுதிக்குள் சம் பந்தப்பட்ட நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க் கப்படுகிறது.