முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா?- பரவும் வதந்திகளால் பரபரப்பு

முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா?- பரவும் வதந்திகளால் பரபரப்பு
Updated on
1 min read

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து பரவும் வதந்திகளால், தலைமைச் செயலகம் மற்றும் அதிமுக வட்டாரத்தில் பர பரப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிமுக சார்பில் ஜூலை 1-ம் தேதி, சென்னை வர்த்தக மையத்தில் நடந்த இஃப்தார் நோன்பில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கவில்லை. முதல்வர் அனுப்பிய செய்தியில் உடல்நிலை சரியில்லை என்பதை குறிப்பிட்டிருந்தார்.

ஜூலை 4-ம் தேதி தலைமைச் செயலகம் வந்த முதல்வர், ஆர்.கே.நகர் எம்எல்ஏ-வாக பதவியேற்றார். அன்று பகலில் செல்வதாக இருந்த கொடநாடு பயணம் ரத்து செய்யப் பட்டது.

தலைமைச் செயலகம் வரவில்லை

அதன் பின் முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகம் வரவில்லை. இதன் காரணமாக முதல்வரின் உடல்நிலை குறித்த பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.

இதற்கிடையில், நேற்று காலையில் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வதாக தகவல் பரவியது. ஆனால், அவர் போயஸ் கார்டன் வீட்டில் ஓய்வில் இருக்கும் தகவல் மட்டுமே உறுதியானது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in