நேதாஜி மரணம் குறித்த ஜப்பான் ஆவணத்தை மத்திய அரசு உறுதி செய்ய வலியுறுத்தல்

நேதாஜி மரணம் குறித்த ஜப்பான் ஆவணத்தை மத்திய அரசு உறுதி செய்ய வலியுறுத்தல்
Updated on
2 min read

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மரணம் குறித்து ஜப்பான் அரசு வெளியிட்டுள்ள ஆவணம்குறித்து மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மரணம்குறித்த விவரங்கள் கொண்ட ஜப்பான் அரசின் 60 ஆண்டு பழமையான ஆவணம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி உள்ளது. ஜப்பானிய மொழி யில் 7 பக்கங்களும், ஆங்கில மொழி பெயர்ப்பில் 10 பக்கங்களும் கொண்ட அந்த ஆவணத்தில், 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி விமான விபத்தில் சிக்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அன்றைய தினமே தைப்பே நகரில் உள்ள மருத்துவமனையில் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ஆவணம் குறித்து மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:

பி.வி.கதிரவன் (அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில பொதுச் செயலாளர்):

நேதாஜியின் நிலைகுறித்து அறிய, பாஜக அரசு முகர்ஜி கமிஷனை அமைத்தது. விபத்து நடந்ததாகக் குறிப்பிடும் 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி தைவானில் குறிப்பிடப்பட்ட விமானம் பறக்கவில்லை என்றும், விபத்தே நடக்கவில்லை என்றும் கமிஷன் தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட பலருக்கும் சம்மன் அனுப்பி விசாரித்த பின்னரே இந்த அறிக்கையை வெளியிட்டது. 3 கமிஷன்கள் அமைக்கப்பட்டும் நேதாஜியின் நிலைகுறித்து முழு விவரம் வெளியாகவில்லை. நேதாஜி இறந்திருந்தால் இதுவரை இறப்பு சான்றிதழ் ஏன் வழங்கப்படவில்லை? இந்திய அரசு நேதாஜி இறந்ததாக ஏன் இதுவரை சொல்லவில்லை? சுதந்திரத்துக்கு பாடுபட்ட பெரிய தலைவர் நேதாஜியை இதுவரை ஏன் கண்டுபிடிக்கவில்லை?

ஆங்கிலேயர்களுடன் 1947-ல் காங்கிரஸ் ஒரு ஒப்பந்தத்தை செய்துகொண்டது. இதன்படி, நேதாஜியை பிடித்து ஆங்கிலேயர்களிடம் ஒப்படைப்போம் என ஒப்புக்கொண்டது. இந்த ஆவணம் வெளிவந்தால் சிக்கல் என்பதால்தான் காங்கிரஸ் அரசு நேதாஜிகுறித்த உண்மையான ஆவணங்களை வெளியிடவில்லை. எங்களைப் பொறுத்தவரை மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்து, இறப்பு சான்றிதழ் வழங்கும்வரை நேதாஜி இறக்கவில்லை என்பதே சரி.

எஸ்.பி.அல்லிக்கொடி (மாநில பொதுச் செயலாளர், அகில இந்திய பார்வர்டு பிளாக் சமாஜ்வாடி):

நேதாஜி இறக்கவில்லை எனவும் ரஷ்யா சென்றபோது அவரை சிறையில் பார்த்ததாகவும் நேருவின் சகோதரி விஜயலட்சுமி பண்டிட் நேருவிடம் தெரிவித்துள்ளார். இதை நேருவே வெளியிடாமல் மவுனம் காத்தார். நேதாஜியை நான் கண்டேன் என முத்துராமலிங்கத் தேவரும் பேசியுள்ளார். இதை அவர் 1961-ம் ஆண்டு பிப்ரவரியில் எழுதிய புத்த கத்திலேயே குறிப்பிட்டுள்ளார். நேதாஜி குறித்து பாஜக வெளியிட்ட ஆவணங் களிலும், மம்தா பானர்ஜி வெளியிட்ட ஆவணங்களிலும் தைவானில் அவர் இறந்ததாக எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை.

முத்துராமலிங்கத் தேவர் இறப்புக்குப் பின்னரே நேதாஜி இறந்துள்ளார். ஜவஹர் லால் நேரு இறப்பில் மாறுவேடத்தில் வந்து நேதாஜி பங்கேற்றதாகவும் தகவல் உள்ளது. தைவானில் அவர் இறக்க வில்லை என்பது ஏற்கெனவே உறுதிப் படுத்தப்பட்ட தகவல். இதுவே அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தீர் மானமான கொள்கையும். இணையதளத் தின் தகவலை முழுமையாக ஆய்வு செய்வோம். இதுபற்றி மத்திய அரசுதான் உறுதிப்படுத்த வேண்டும்

கே.ஏ.முருகன்ஜி (பாரதிய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனர்):

நேதாஜி குறித்து 1998-ல் பிரிட்டிஷ் அரசு ஆவணங் களை வெளியிட்டது. அதில் நேதாஜி ரஷ்யாவில் இருந்ததாக நேரு குறிப்பிடும் தகவல் இடம்பெற்ற கடிதம் இடம்பெற் றிருந்தது. இதன் மூலம் நேதாஜி ரஷ்யா வில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ள தால், தைவானில் இறந்திருக்க வாய்ப்பு இல்லை. மேலும் இதுகுறித்து உண்மையை வெளிக்கொண்டுவர அமைக்கப்பட்ட 3 விசாரணை கமிஷன்களும் நேதாஜியின் இறப்பை உறுதிப்படுத்தவில்லை.

நேதாஜி இறந்துவிட்டதாக லண்டன், ரஷ்யா, ஜப்பான் என யார், யாரோ சொல்கிறார்கள். இதில் எது உண்மை என சரிபார்த்து, நேதாஜியின் மறைவு குறித்து சரியான தகவலை வெளியிட வேண்டிய கடமை மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது. நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை. அவர் உயி ருடன் உள்ளார் என தனது ஆயுட்காலம் வரை தெரிவித்து வந்தவர் முத்துராம லிங்கத் தேவர். லண்டன் இணைய தளத்தின் தகவலை நம்ப முடியாது. மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்தால் மட்டுமே நேதாஜி இறப்பின் மர்மம் முழுமையாக விலகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in