தமிழக பேரவைத் தேர்தல்: சிறப்பு பேருந்துகளில் 1.88 லட்சம் பேர் பயணம்

தமிழக பேரவைத் தேர்தல்: சிறப்பு பேருந்துகளில் 1.88 லட்சம் பேர் பயணம்
Updated on
1 min read

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகளில் செவ்வாய்க்கிழமை மட்டும் 1.88 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக சென்னையிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 21-ம் தேதி நள்ளிரவு 12 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டதுடன், கூடுதலாக 1,339 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 3,431 பேருந்துகள் இயக்கப்பட்டு, 1,88,705 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். அத்துடன் இதுவரை 18,633 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும். கடைசி நேர கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, பொதுமக்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை (ஏப்.23) நடைபெறுகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் பலர் வாக்களிக்க தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். அவர்களின் வசதிக்காக ஏப். 21, 22 மற்றும் 23-ம் தேதி பகல் 1 மணி வரை தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் 10 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று செவ்வாய்க்கிழமை இயக்கப்பட்ட பேருந்துகளில் 1.88 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக பேரவைத் தேர்தல்: சிறப்பு பேருந்துகளில் 1.88 லட்சம் பேர் பயணம்
‘பிரதமர் மோடியை ‘பயங்கரவாதி’ என கூறிய கார்கே மீது நடவடிக்கை எடுப்பீர்’ - தேர்தல் ஆணையத்திடம் பாஜக முறையீடு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in