

தமிழக அரசு அறிவித்திருக்கும் 'அம்மா சிமென்ட்' திட்டத்தால் தமிழகத்தில் செயற்கையான சிமென்ட் தட்டுப்பாடு ஏற்படும் என சிமென்ட் தொழிலில் இருப்பவர்கள் தரப்பிலிருந்து அச்சம் தெரிவிக்கிறார்கள்.
குறைந்த விலையில் ஏழை, எளிய மக்களுக்கு சிமென்ட் வழங்கும் ‘அம்மா சிமென்ட்’ எனும் திட்டத்தை செயல்படுத்த முன் னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். இத்திட்டத் தின்படி, தமிழ்நாட்டில் உள்ள தனியார் சிமென்ட் உற்பத்தியாளர் களிடமிருந்து மாதம் ஒன்றுக்கு 2 லட்சம் மெட்ரிக் டன் சிமென்ட் கொள்முதல் செய்யப்பட்டு, அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் பஞ்சாயத்து யூனியன்களில் உள்ள 470 கிடங்கு களில் இருப்பு வைத்து மூட்டை ஒன்று 190 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில், 100 சதுர அடிக்கு 50 மூட்டைகள் வீதம் அதிகபட்சம் 1,500 சதுர அடிக்கு 750 மூட்டைகள் வரை சலுகை விலையில் சிமென்ட் பெற்றுக் கொள்ளலாம். வீடுகள் புதுப்பிக்க மற்றும் பழுது பார்க்க 10 முதல் 100 மூட்டைகள் வரை இந்த விலையில் சிமென்ட் விற்பனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அம்மா சிமென்ட் திட்டத்தில் மலிவு விலையில் சிமென்ட் விற்பனை செய்யப்பட்டால் செயற்கையான சிமென்ட் தட்டுப்பாடு தமிழகத்தில் ஏற்படும் என்கிறார்கள் இந்தத் தொழிலில் இருப்பவர்கள்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசியவர்கள் கூறியதாவது: “ஏற் கெனவே சிமென்ட் உற்பத்திக்கான கச்சா பொருட்கள் விலை ஏற்றத்தாலும் டீசல் விலை மற்றும் கூலி உயர்வாலும் தமிழகத்தில் சிமென்ட் உற்பத்தியாளர்கள் பாதிக் கப்பட்டிருக்கிறார்கள். உற்பத்தி செய்யப்பட்டு வெளியில் அனுப் பப்படும் சிமென்டில் ஒரு மூட்டைக்கு 2 ரூபாய் வீதம் இதர வழிகளுக்காக செலவழிக்க வேண்டியிருக்கிறது. இதன் மூலம் மட்டுமே சிமென்ட் நிறுவனங் களுக்கு 8 முதல் 10 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது.
இந்தச் செலவினங்களை சமாளிப்பதற்காக ஏற்கெனவே, சிமென்ட் உற்பத்தியாளர்கள் சிலர் தங்களது உற்பத்தியை குறைத்துவிட்டார்கள். இப்போது மலிவு விலை சிமென்ட் திட்டத்தை அறிவித்திருப்பதன் மூலம், சிமென்ட் உற்பத்தியாளர்கள் ஒரு மூட்டைக்கு ரூ.50 அளவுக்கு நேரடியான பாதிப்பை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
சிமென்ட் தயாரிப்பு செலவு உயர்ந்து கொண்டே போகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தாமல் சிமென்ட் விலையை மட்டும் குறைக்கச் சொல்வது எந்த விதத்தில் நியாயம்? சிமென்ட் ஆலைகள் தங்களது உற்பத்தியில் இத்தனை சதவீதத்தை அரசின் மலிவு விலை திட்டத்துக்கு தந்துவிட வேண்டும் என்பது விதி. இதனால் சிமென்ட் ஆலைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அவர்கள் தங்களது உற்பத்தியின் அளவை இன்னும் குறைக்க வாய்ப்பிருக்கிறது. இதன் மூலம் வெளி மார்க்கெட்டிலும் செயற்கையான சிமென்ட் தட்டுப்பாடு ஏற்படுவது நிச்சயம்” என்று சிமென்ட் தொழிலில் இருப்பவர்கள் தெரிவித்தனர்.