

காவிரி நீரைத் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்துப் போராட்டம் நடத்தப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி கூறினார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணத்தில் உள்ள மகாமகக் குளம் மற்றும் ஆதிகும்பேஸ் வ ரர் கோயிலில் நேற்று வழிபட்ட நாராயணசாமி, பின்னர் செய்தி யாளர்களிடம் கூறியது:
தமிழகம், புதுச்சேரிக்கு அளிக்க வேண்டிய காவிரி நீரைத் தராமல், வஞ்சித்து வரும் கர்நாடக அரசைக் கண்டித்துப் போராட்டம் நடத்தப்படும்.
மாநிலங்களுக்கு நிதி அளிப்ப தில், மத்திய அரசு பாரபட்சத்து டன் நடந்துகொள்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதியும், மற்ற மாநிலங்களுக்கு குறைந்த நிதியும் வழங்கப்படு கிறது என்றார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநராக உள்ள கிரண்பேடி, மாநில அரசுக்குப் போட்டியாக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடு பட்டு வருவது குறித்து கேட்ட போது, ‘ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்களின் செயல் பாடுகள் குறித்து பிரதமருடன் ஆலோசித்துள்ளோம். தற்போது ஆளுநர்களாக நியமிக்கப்பட்டவர் கள், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இவர்களில் பலர், அதி கார வரம்பையும், அரசியல் சாசனத் தையும் மீறுகின்றனர்’ என்றார்.