புதிய அமைச்சரவையில் செங்கோட்டையனுக்கு பள்ளிக் கல்வித் துறை

புதிய அமைச்சரவையில் செங்கோட்டையனுக்கு பள்ளிக் கல்வித் துறை

Published on

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதிமுகவின் அவைத் தலைவர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு பள்ளிக் கல்வித் துறை வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறை, விளையாட்டு, இளைஞர் நலத் துறை அமைச்சராக இருந்த பாண்டியராஜன் ஓபிஎஸ் அணிக்கு சென்றுவிட்டதால் அவருக்குப் பதிலாக செங்கோட்டையன் அப்பதவியில் நியமிக்கப்பட்டிருக்கிறார். அமைச்சரவையில் மூன்றாவது இடம் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. புதிய அமைச்சரவையில் மொத்தம் 31 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்புகளும் வலியுறுத்திவந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் இன்று அழைப்பு விடுத்தார். அதன்படி தமிழகத்தின் 21-வது முதல்வராகிறார் எடப்பாடி பழனிசாமி. அவருடன் அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in