ஓமன் நாட்டில் வேலைவாய்ப்பு: பி.பார்ம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஓமன் நாட்டில் வேலைவாய்ப்பு: பி.பார்ம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read

ஓமன் நாட்டில் மருந்தாளுநர் பணிக்கு பி.பார்ம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஓமன் நாட்டில் உள்ள மருந்தக நிறுவனத்துக்கு ஆங்கில புலமையுடன் பி.பார்ம் மற்றும் புரோமெட்ரிக் தேர்வு முடித்த 30 முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண் மருந்தாளுநர்கள் உடனடியாக தேவைப்படுகிறார்கள்.

தேர்ந்தெடுக்கப் படுபவர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப ஊதியத் துடன் ஓமன் நாட்டின் தொழிலாளர் சட்டத் திட்டத்துக்குட்பட்ட மருத்துவ வசதியும் அளிக்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் ஒரு புகைப்படத்துடன் எண்.42, ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகம், ஆலந்தூர் சாலை, திரு.வி.க.தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 32 என்ற முகவரியில் உள்ள தமிழக அரசு நிறுவனமாக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு தபால் மூலமோ அல்லது ovemclsn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ வரும் 17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு 044-22502267, 044-22505886 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் www.omcmanpower.com என்ற இணையதளத்திலும் அறிந்துக் கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in