

தமிழகம் முழுவதும் இம்மாதம் 5-ம் தேதி நடைபெறவுள்ள விவசாயிகளின் மறியல் போராட்டத்துக்கு திமுக ஆதரவு கோரி, அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலினை அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் திங்கட்கிழமை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் நேரில் சந்தித்தார்.
அப்போது, 'தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்' என்பதை வலியுறுத்தி, அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில் இம்மாதம் 5-ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் நடைபெறவுள்ள மறியல் போராட்டத்துக்கு திமுக ஆதரவளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.