அழகிரி விசுவாசிகளிடம் ஆதரவு கோரும் மதிமுக

அழகிரி விசுவாசிகளிடம் ஆதரவு கோரும் மதிமுக
Updated on
1 min read

விருதுநகர் தொகுதியில் களமிறங்க இருக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை ஆதரிக்கும்படி மு.க.அழகிரி ஆதரவாளர்களிடம் மதிமுக-வினர் கோரி வருகின்றனர்.

விஐபி தொகுதிகளில் ஒன்றாகிவிட்ட விருதுநகர் தொகுதி யில் கம்யூனிஸ்ட்களோடு சேர்த்து இதுவரை ஐந்து முனை போட்டி உறுதியாகி விட்டது. இவர்களில் வைகோவும் காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூரும் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி வாக்குச் சேகரித்து வருகின்றனர். இந்நிலையில், அண்மையில் மதுரை விமான நிலையத்தில் மு.க.அழகிரியும் வைகோவும் யதார்த்தமாக சந்தித்துப் பேசிக் கொண்டனர். இதையடுத்து, விருதுநகர் தொகுதியில் உள்ள அழகிரி விசுவாசிகளை வளைக்க ஆரம்பித்திருக்கும் மதிமுக-வினர், அவர்களை ரகசியமாக சந்தித்துப் பேசிவருகின்றனர்.

இந்த சந்திப்புகளின்போது, “உங்கள் அண்ணன் அழகிரியும் எங்கள் தலைவர் வைகோவும் கைகுலுக்கி சமாதானமாகி விட்டார்

கள். திமுக-வில் அழகிரி ஆதரவாளர்களைப் புறந்தள்ளி வைத்திருக்கிறார்கள். இதனால் திமுக தலைமை மீது கோபத்தில் இருக்கும் அழகிரி நிச்சயம் வைகோவுக்கு ஆதரவு கொடுப்பார். எனவே, நீங்கள் இந்தத் தேர்தலில் திமுக-வுக்கு வேலை செய்யாமல் எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்’’ என்று மதிமுக-வினரிடம் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in