ஏற்காடு இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் அறிவிப்பு
ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் பி.சரோஜா போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சரோஜா, மறைந்த ஏற்காடு எம்.எல்.ஏ. பெருமாளின் மனைவியாவர்.
ஏற்காடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த பெருமாள், கடந்த ஜூலை மாதம் உயிரிழந்ததையடுத்து அங்கு, வரும் டிசம்பர் 4-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. பெருமாள், 1989, 1991 and 2011 என மூன்று முறை ஏற்காடு தொகுதியில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் ஒட்டுமொத்த கவனமும் ஏற்காடு இடைத்தேர்தல் பக்கம் திரும்பியுள்ளது.
தி.மு.க. சார்பில் வெ.மாறன் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், ஏற்காடு இடைத் தேர்தலைக் கைகழுவி விட்டார்.
தே.மு.தி.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முடிவெடுக்காமல் மௌனம் காக்கின்றன. இதனால், அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் நேரடி போட்டி இருக்கும் எனத் தெரிகிறது.
