போலீஸ்காரர் வங்கிக் கணக்கில் தீவிரவாதிகள் செலுத்திய ரூ.25 ஆயிரம்!

போலீஸ்காரர் வங்கிக் கணக்கில் தீவிரவாதிகள் செலுத்திய ரூ.25 ஆயிரம்!
Updated on
2 min read

உயிரை துச்சமாக நினைத்து, தீவிரவாதிகளைப் பிடித்த போலீ ஸாருக்கு பாராட்டு, பதவி உயர்வு, பரிசு மழை என முதலமைச்சர் அசத்திக் கொண்டிருக்கும் நிலையில்தான் இப்படியும் ஒரு தகவல்!

தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்டில் மதுரை முக்கிய இடத்தில் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துக் கொண்டே இருக்கி றது. ஆனாலும், தீவிரவாதி களைக் கண்காணிக்கும் காவல் துறையின் செயல்பாடுகள் திருப்திகரமாய் இல்லை. அதனால்தான் அண்மைக்கால மாய் மதுரையில் மட்டும் எட்டு இடங்களில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. கடைசியாக கடந்த நவம்பர் முதல் தேதி, திருப்பரங்குன்றம் மலையிலிருந்து வெடிகுண்டுப் புதையல் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில்தான் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கும் தீவிரவாதி களுக்கும் இடையேயான உறவு அம்பலத்துக்கு வந்துள்ளது.

திருப்பரங்குன்றம் இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையிலான போலீஸ் படைதான் திருப்பரங்குன்றம் மலையில் வெடிகுண்டுப் புதை யலைக் கண்டுபிடித்தது. இந்தச் சம்பவத்தில் மதுரையைச் சேர்ந்த முக்கியமான மூன்று நபர்களுக்குத் தொடர்பிருப்பதை ஆதாரத்துடன் கண்டுபிடித்திருக்கிறார் மாடசாமி. ஆனால், 'மூவரும் எங்களுக்கு சோர்ஸ்' என்று சொல்லி அவர்களைக் கைது செய்யவிடாமல் தடுத்துவிட்டனவாம் சிறப்புப் புலனாய்வுப் பிரிவுகள்.

இதுதொடர்பாக மதுரைக் காவல் வட்டாரத்திலிருந்து நம்மிடம் பேசியவர்கள், "போலீஸ் பக்ருதீனும், பிலால் மாலிக்கும்தான் பயங்கரமானவர்கள் என நினைக்கி றோம். ஆனால், மாட சாமி அடையாளம் காட்டிய மூவரும் அவர்களைவிட பயங்கரமானவர்கள். இவர்கள்தான் அல்-முன்தஹீம் அமைப்பை இயக்குபவர்கள். விசாரணையின்போது இவர்களோடு பரமக்குடியைச் சேர்ந்த ஒரு நபருக்குத் தொடர்பிருந்ததைக் கண்டுபிடித்த மாடசாமி, அந்த நபரை பிடித்து விசாரித்தார்.

பரமக்குடி முருகன் மற்றும் அரவிந்த் ரெட்டி கொலை வழக்குகளில் பொய்யான குற்றவாளிகளைச் சேர்த்திருப்பதை அப்போதே பரமக்குடி நபர் வாக்குமூலமாக சொல்லிவிட்டார். முருகன் கொலையில் பரமக்குடியைச் சேர்ந்த இன்னொரு முக்கியப் புள்ளிதான் மூலகாரணம். அவர் இப்போது தமிழ்நாட்டில் இல்லை. மதுரையில் உள்ள சிறப்புப் புலனாய்வுப் பிரிவு ஒன்றைச் சேர்ந்த போலீஸாருக்கு அந்த பரமக்குடி முக்கியப் புள்ளி பெருந்தொகை கொடுத்திருக்கிறார். இதில் யார் யாருக்கு பங்கு போனதோ தெரியவில்லை.

மாடசாமியிடம் சிக்கிய பரமக்குடி நபர்தான் இந்தப் பரிவர்த்தனை களைச் செய்தவர். அதேநபர்தான் கடைசியாக 25 ஆயிரம் ரூபாயை சிறப்புப் புலனாய்வுப் பிரிவு போலீஸ்காரர் ஒருவரின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்தவர். அதற்கான ரசீதையும் மாடசாமியிடம் கொடுத்திருக்கிறார். தற்போது முதல்வர் வழங்கிய பரிசும் பதவி உயர்வும் தீவிரவாதிகளிடம் பணம் வாங்கிய இந்தப் போலீஸ்காரருக்கும் கிடைத்திருக்கிறது என்பதுதான் வேதனையிலும் வேதனை!

இதையெல்லாம் அப்படியே அறிக்கையாக மேலிடத்துக்கு அனுப்பியும் விட்டார் மாடசாமி. விசாரணை இப்படியே போனால் தாங்கள் மாட்டிக் கொள்வோம் என்று மிரண்டு போன சிறப்புப் புலனாய்வுப் பிரிவுப் போலீஸார், மாடசாமியை மாற்றக் கோரி போராட்டங்களையும் நடத்த வைச்சாங்க. நீதிமன்றத்தில் வழக்குகளையும் தாக்கல் செய்ய வைச்சாங்க. வழக்கு விசார ணைக்கு வந்தால், அத்தனை விஷயங்களையும் நீதிமன்றத்தில் பிட்டுப்பிட்டு வைக்க தயாராய் இருந்தது மதுரை ரூரல் போலீஸ். இது தெரிந்து மிரண்டு போனவர்கள், மேலிடத்தில் பிரஷர் கொடுத்து மாடசாமியை நெல்லைக்கு மாற்றிவிட்டார்கள். ஆனால், மாவட்ட எஸ்.பி-யான பாலகிருஷ்ணன் தலையிட்டு டிரான்ஸ்ஃபரை நிறுத்தி வைத்திருக்கிறார்.

போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் இவர்களைப் பிடித்த பிறகு அந்த முக்கிய புள்ளி களை கைவைக்கலாம் என்று முதலில் சொன்னார்கள். இப்போது, ‘தேவர் ஜெயந்தி முடியட்டும்'னு சொல்றாங்க. அந்த பயங்கரவாதிகள் மூவரும் இப்போதும் மதுரைக்குள் சுதந்திரமாய் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்" என்று சொல்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in