நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் தமிழகம் முழுவதும் ரூ.3,511 கோடியில் 183 திட்டங்கள் தொடக்கம்

ரூ.1,267 கோடி பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் பல கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை காணொலி வாயிலாக திறந்துவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிவைத்தார். உடன், அமைச்சர்கள், உயரதிகாரிகள்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் பல கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை காணொலி வாயிலாக திறந்துவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிவைத்தார். உடன், அமைச்சர்கள், உயரதிகாரிகள்.

Updated on
2 min read

சென்னை: நக​ராட்சி நிர்​வாகத் துறை சார்​பில் ரூ.3,511 கோடியி​லான 183 முடிவுற்ற திட்​டப் பணி​களை திறந்​து​வைத்த முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், ரூ.1,267.62 கோடி மதிப்​பிலான 10 திட்​டப் பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டி​வைத்​தார்.

இது தொடர்​பாக தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: நாமக்​கல் மாவட்​டம், ராசிபுரம் கூட்​டுக் குடிநீர் திட்​டத்​தில் 7 ஒன்​றி​யங்​களுக்கு உட்​பட்ட 1,070 ஊரகக் குடி​யிருப்​பு​கள், 11 ஊராட்​சிகளுக்கு ரூ.1,138.41 கோடி​யில் 2 கூட்​டுக் குடிநீர் திட்​டங்​களை முதல்​வர் ஸ்டா​லின் காணொலி வாயி​லாக தொடங்​கி​வைத்​தார்.

இதே​போல, தூத்​துக்​குடி மாவட்​டம் தூத்​துக்​குடி, ஓட்​டப்​பி​டாரம், கயத்​தார், கோவில்​பட்​டி,புதூர், விளாத்​தி​குளம் ஒன்​றி​யங்​களைச் சேர்ந்த 363 ஊரகக் குடி​யிருப்​பு​களுக்கு ரூ.515.72 கோடி, திரு​வள்​ளூர் மாவட்​டம் திருத்​தணி, ஆர்​.கே.பேட்டை ஊராட்சி ஒன்​றி​யங்​களில் செருக்​க​னூர் மற்​றும் 114 ஊரகக் குடி​யிருப்​பு​களுக்கு ரூ.44.58 கோடி, செங்​கல்​பட்டு மாவட்​டம் திருப்​போரூர் ஒன்​றி​யத்​தைச் சார்ந்த கோவளம் மற்​றும் 10 ஊரகக் குடி​யிருப்​பு​களுக்கு ரூ.13.62 கோடி, கன்​னி​யாகுமரி மாவட்​டம் தோவாளை ஒன்​றி​யத்​தில் 24 ஊரகக் குடி​யிருப்​பு​களுக்கு ரூ.7.06 கோடி, திருப்​பத்​தூர் மாவட்​டம் மாதனூர் ஒன்​றி​யத்​தில் வடசேரி மற்​றும் 17 குடி​யிருப்​பு​களுக்கு ரூ.4.95 கோடி என மொத்​தம் ரூ.1,724.34 கோடி​யில், 11.60 லட்​சம் பேர் பயன்​பெறும் வகை​யில் 7 கூட்​டுக் குடிநீர் திட்​டங்​களை முதல்​வர் ஸ்டா​லின் தொடங்​கி​வைத்​தார்.

கோவை மாநக​ராட்சி குறிச்​சி, குனிய​முத்​தூரில் ரூ.591.14 கோடி, திரு​வள்​ளூர் பொன்​னேரி​யில் ரூ.62.82 கோடி என மொத்​தம் ரூ.653.96 கோடி​யில், 4.96 லட்​சம் பேர் பயனடை​யும் வகை​யில் பாதாள சாக்​கடை திட்​டங்​களை தொடங்கி வைத்​தார். வளசர​வாக்​கம், சோழிங்​கநல்​லூர் (செம்​மஞ்​சேரி மற்​றும் நீலாங்​கரை) பகு​தி​களில் ரூ.74.74 கோடி​யில் குடிநீர் வழங்​கல் பணி​கள், சோழிங்​கநல்​லூர் மண்​டலத்​தில் ரூ.68.70 கோடி, வில்​லி​வாக்​கத்​தில் ரூ.17.97 கோடி, கொடுங்​கையூரில் ரூ.45.07 கோடி மதிப்​பில் கழி​வுநீர் சுத்​தி​கரிப்பு நிலை​யங்​களை திறந்து வைத்​தார்.

பாதாள சாக்கடை திட்டம்: மேலும், மணலி, ஆலந்​தூர் (முகலி​வாக்​கம்), பெருங்​குடி (பள்​ளிக்​கரணை) மற்​றும் சோழிங்​கநல்​லூர் (உத்​தண்​டி, ஒக்​கி​யம்​-துரைப்​பாக்​கம்) மண்​டலங்​களில் ரூ.188.07 கோடி​யில் பாதாள சாக்​கடை திட்​டப் பணி​கள், மாதவரம், தண்​டை​யார்​பேட்​டை, அம்​பத்​தூர், அண்​ணாநகர் மண்​டலங்​களில் உள்ள நீர் நிலைகளில் கழி​வுநீர் கலப்​பதை தடுக்​கும் பொருட்டு ரூ.106.42 கோடி, தண்​டை​யார்​பேட்​டை, தேனாம்​பேட்​டை, கோடம்​பாக்​கம், அடை​யாறு மற்​றும் ஆலந்​தூர் மண்​டலங்​களில் ரூ. 134.33 கோடி​யில் கழி​வுநீர் உந்​துகுழாய் என ரூ.635.31 கோடி​யில் முடிவுற்ற திட்​டப்​பணி​களை முதல்​வர் தொடங்​கி​வைத்​தார்.

நகராட்சி நிர்​வாகத்​துறை சார்​பில் ரூ.237.04 கோடி​யில் 62 முடிவுற்ற பணி​கள், பேரூ​ராட்​சிகளின் இயக்​குநரகம் சார்​பில்ரூ.174.45 கோடி​யில் 27 முடிவுற்ற பணி​கள், சென்னை மாநக​ராட்சிசார்​பில் ரூ.86.04 கோடி​யில் முடிவுற்ற 63 திட்​டப் பணி​களை​யும் முதல்​வர் தொடங்​கி​வைத்​தார்.

சர்​தார் பட்​டேல் சாலை-வேளச்​சேரி பிர​தான சாலை சந்​திப்​பிலிருந்து குரு​நானக் கல்​லூரி சந்​திப்பு வரை 200 அடி சாலை​யில் ரூ.310 கோடி​யில் புதிய மேம்​பாலம் உட்பட ரூ.335.62 கோடி​யில் 8 புதிய திட்​டப் பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டி​னார். இதுத​விர, புழல் சுத்​தி​கரிப்பு நிலை​யத்​தில் ரூ.555.88 கோடி​யில் மேம்​பாட்​டுப் பணி​கள், ரூ.376.12 கோடி​யில் பள்​ளிப்​பட்டு மற்​றும் திரு​வான்​மியூருக்கு குடிநீர் விநி​யோகப் பணி​கள் என ரூ.932 கோடியி​லான 2 திட்​டப் பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டி​னார்.

புதிய வாகனங்கள்: தொடர்ந்​து, சென்னை குடிநீர் வாரி​யத்​தின் பயன்​பாட்​டுக்​காக ரூ.47 லட்​சம் மதிப்​பில் 5 புதிய வாக​னங்​களுக்​கான சாவி​களை முதல்​வர் ஸ்டா​லின் வழங்​கி​னார். நிகழ்ச்​சி​யில், அமைச்​சர்​கள் கே.என்​.நேரு, கீதாஜீவன், ஆர்​.​காந்​தி, மா.சுப்​பிரமணி​யன், பி.கே.சேகர் பாபு, மா.ம​திவேந்​தன், மேயர் ஆர்​.பிரி​யா, தலை​மைச்​ செயலர்​ நா.​முரு​கானந்​தம்​ மற்​றும்​ அதி​காரி​கள்​ பங்​கேற்​றனர்​.

<div class="paragraphs"><p>சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் பல கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை காணொலி வாயிலாக திறந்துவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிவைத்தார். உடன், அமைச்சர்கள், உயரதிகாரிகள்.</p></div>
ரூ.34,237 கோடி மதிப்பில் 15 தொழில் திட்டங்கள்: தமிழக அமைச்சரவை அனுமதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in