

அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது இந்தியா வுக்கு பெருமை அளிக்கும் நிகழ்வு என முதல்வர் ஜெயலலிதா புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
பாரத் ரத்னா, அமைதிக்கான நோபல் பரிசு போன்ற விருதுகளை பெற்ற அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது இந்தியாவுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய பெருமையாகும்.
மிஷனரிஸ் ஆப் சாரிட்டி அமைப்பு மூலம் ஏழை, எளிய மக்களுக்கு தொண்டாற்றி வந்த அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழா வாடிகனில் நாளை (செப். 4) நடைபெறவுள்ளது. அவரது சேவை பணிகளை பாராட்டும் வகையில் மகளிர் பல்கலைக்கழகத்துக்கு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் என பெயர் சூட்டி தமிழகம் பெருமை கொண்டது.
அன்னை தெரசாவை பின்பற்றி அடித்தட்டு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. 1994-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி அன்னை தெரசா எனது இல்லத்துக்கு வருகை தந்து ஆசி வழங்கியது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியமாகும். 1994 மார்ச் 9-ம் தேதி நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் அவர் பங்கேற் றது எனது வாழ்வில் என்றென் றும் நிலைத்திருக்கும் இனிய நிகழ்வாகும்.
தெரசாவுக்கு புனிதர் பட்டம் அறி விக்கப்பட்டிருப்பது புறக்கணிக்கப் பட்ட ஏழை மற்றும் அடித்தட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய சேவைகளை நினைவுப்படுத்து கிறது. அவருக்கு புனிதர் பட்டம் வழங்கபட இருப்பது ஏழை, எளிய மக்களுக்காக தொண் டாற்றுபவர்களுக்கு மென்மேலும் ஊக்கத்தை அளிக்கும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.