

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணியில் 1,82,865 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று வெளியிட்டார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதியில் எஸ்ஐஆர் திருத்தப் பணிக்கு முன்பாக 17,27,490 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். திருத்தப் பணிக்கு பிறகு 1,82,865 வாக்காளர்கள் நீக்கப்பட்டு மொத்தம் 15,44,625 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 7,64,377 ஆண்கள், 7,80,042 பெண்கள், 206 மூன்றாம் பாலினத்தவர்கள். மேலும் 18,286 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், 12,928 மூத்த குடிமக்களும் (85 வயது கடந்தவர்கள்) என மொத்தம் 31,214 வாக்காளர்கள் உள்ளனர்.
தொகுதி வாரியாக விவரம்: செஞ்சி தொகுதியில் 1,16,444 ஆண்கள், 1,18,448 பெண்கள், 28 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,34,920 வாக்காளர்களும், மயிலம் தொகுதியில் 1,01,237 ஆண்கள், 1,01,270 பெண்கள், 21 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,02,528 வாக்காளர்கள் உள்ளனர்.
திண்டிவனம் (தனி) தொகுதியில் 1,04,327 ஆண்கள், 1,07,755 பெண்கள், 15 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,12,097 வாக்காளர்களும், வானூர் (தனி) தொகுதியில் 99,964 ஆண்கள், 1,03,703 பெண்கள், 16 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,03,683 வாக்காளர்கள் உள்ளனர்.
விழுப்புரம் தொகுதியில் 1,14,742 ஆண்கள், 1,20,270 பெண்கள், 71 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,35,083 வாக்காளர்களும், விக்கிரவாண்டி தொகுதியில் 1,09,977 ஆண்கள், 1,12,791 பெண்கள், 28 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,22,796 வாக்காளர்களும் உள்ளனர்.
திருக்கோவிலூர் தொகுதியில் 1,17,686 ஆண்கள், 1,15,805 பெண்கள், 27 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,33,518 வாக்காளர்களும் என 7 சட்டப்பேரவைத் தொகுதியில் 7,64,377 ஆண்கள், 7,80,042 பெண்கள், 206 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 15,44,625 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
எஸ்ஐஆர் திருத்தப் பணியின்போது பட்டியலில் இருந்து இறந்தவர்கள் எனக்கூறி 67,182 பேர் நீக்கப்பட்டுள்ளனர். மேலும் கண்டுபிடிக்க முடியாதவர்கள், விடுபட்டவர்கள், நிரந்தர இடமாற்றம் செய்தவர்கள் என 1,07,348 பேரும், இரட்டை வாக்குரிமை உள்ளவர்கள் என 7,998 பேரும், தொடர்பு கொள்ள முடியாதவர்கள் என 337 பேரும் என மொத்தம் 1,82,865 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களின் ஆண் மற்றும் பெண்கள் எத்தனை பேர் என்ற விவரம் தற்சமயம் இல்லை என ஆட்சியர் தெரிவித்தார்.
100 வயதில் 53 வாக்காளர்கள்: முதல் தலைமுறை வாக்காளர்களாக (18 மற்றும் 19 வயது) 18,360 பேர் உள்ளனர். சிறப்பு அம்சமாக 100 வயதை கடந்தவர்களாக 53 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் 20 – 29 வயதில் 2,95,241 வாக்காளர்களும், 30 – 39 வயதில் 3,36,528 வாக்காளர்களும், 40 – 49 வயதில் 3,22,611 வாக்காளர்களும், 50 – 59 வயதில் 2,66,479 வாக்காளர்களும், 60 – 69 வயதில் 1,76,570 வாக்காளர்களும், 70 – 79 வயதில் 95,667 வாக்காளர்களும், 80 – 89 வயதில் 29,437 வாக்காளர்களும், 90 – 99 வயதில் 3,679 வாக்காளர்களும் உள்ளனர்.
2,166 வாக்குச்சாவடிகள்: விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கெனவே 1,970 வாக்குச்சாவடிகள் இருந்தன. ஒரு வாக்குச்சாவடிக்கு 1,200 வாக்காளர்கள் மட்டும் இடம்பெற வேண்டும் என்ற விதிகளால் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இதன்மூலம் கூடுதலாக 196 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, மொத்தம் 2,166 வாக்குச்சாவடிகள் உள்ளன.