கரடியை உயிரோடு பிடிக்க வனத்துறை தீவிரம்: அமைச்சர் சீனிவாசன் தகவல்

கரடியை உயிரோடு பிடிக்க வனத்துறை தீவிரம்: அமைச்சர் சீனிவாசன் தகவல்
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே ஊருக்குள் புகுந்த கரடியை உயிரோடு பிடிக்க வனத்துறை தீவிரம் காட்டி வருவதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தார். சட்டப் பேரவையில் நேற்று ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் எச்.வசந்தகுமார் (நாங்குநேரி), ‘‘நாங்குநேரி வட்டம் மூலக்கரைப்பட்டி அருகே உள்ள கிராமங்களில் கரடி புகுந்ததால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இரவில் தூங்க முடியாமல் தவிக்கின்றனர். எனவே, உடனடியாக கரடியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

அவருக்கு பதிலளித்த அமைச்சர் சீனிவாசன், ‘‘நாங்குநேரி வட்டம் மூலக்கரைப்பட்டி அருகே உள்ள கிராமங்களில் கரடி புகுந்துள்ளது. இந்த தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று அதனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வன விலங்குகளைப் பாதுகாக்க வேண்டியது வனத்துறையினரின் கடமையாகும். எனவே, கரடியை உயிரோடு பிடித்து பொதுமக்களைப் பாதுகாக்க வனத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது’’ என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in