பெரியார் திடலில் சிறப்பு புத்தகக் காட்சி: 50 சதவீத தள்ளுபடியில் வாங்கலாம்

பெரியார் திடலில் சிறப்பு புத்தகக் காட்சி: 50 சதவீத தள்ளுபடியில் வாங்கலாம்
Updated on
1 min read

உலக புத்தக நாள் விழாவை முன்னிட்டு சென்னை பெரியார் திடலில் சிறப்பு புத்தகக் காட்சி நாளை முதல் நடைபெறவுள்ளது.

உலக புத்தக நாள் விழா ஏப்ரல் 23-ம் தேதி கொண்டாடப் படுகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் சென்னை புத்தக சங்கமம் என்ற பெயரில் சிறப்பு புத்தகக் காட்சி நடத்தப்படுகிறது.

இதுகுறித்து புத்தகக் காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் பிரின்ஸ் என்.ஆர்.எஸ். பெரியார், கார்த்திகேயன், சரவணன், ஜெய கிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர் களிடம் நேற்று கூறியது:

உலக புத்தக நாளை முன்னிட்டு சிறப்பு புத்தகக் காட்சி நடத்தப்படுகிறது. வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நாளை (ஏப்ரல் 21) முதல் 25-ம் தேதி வரை கண்காட்சி நடைபெறும்.

புத்தகக் கண்காட்சியை ஐ.என்.எஸ். அடையார் போர்க் கப்பலின் தலைமை அதிகாரி கேப்டன் ஜே.சுரேஷ் காலை 9 மணிக்கு தொடங்கி வைக்கிறார். தினமும் காலை 11 முதல் இரவு 9 மணி வரையும் விற்பனை நடைபெறும்.

இந்தாண்டு புத்தகம் வாங்கு வோருக்கு 50 சதவீத தள்ளுபடி விலையில் புத்தகங்கள் வழங்கப் படும். 49 அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன. அது தவிர பொது அரங்கு ஒன்று உள்ளது. இவற்றில் ஏராளமான பதிப்பாளர்கள், லட்சக்கணக்கான தலைப்புகளில் நூல்களை விற்பனை செய்வார்கள். நுழைவுக் கட்டணம் இல்லை. ஏடிஎம் வசதி, கடன் மற்றும் பற்று அட்டைகள் மூலம் புத்தகம் வாங்கும் வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளன.

கண்காட்சிக்கு வரும் வாசகர் களில் தினமும் ஒருவரை தேர்ந் தெடுத்து செல்போன் பரிசு வழங்கப்படும். மேலும் கண் காட்சியின் ஒரு பகுதியாக உணவுத் திருவிழா, குழந்தை களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்படும். 25-ம் தேதி நடக்கும் நிறைவு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்து கொள்கிறார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in