

சென்னை வண்டலூரில் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொள்ள மாட்டார் என்றபோதும் மோடி - வைகோ சந்திப்புக்கு தமிழக பாஜக தலைவர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
பாஜக கூட்டணியில் 10 தொகுதிகள் வரை எதிர்பார்க்கிறார் வைகோ. ஆனால், அவருக்கு ஒற்றை இலக்க எண்ணிக்கையிலேயே சீட்களை ஒதுக்க பாஜக தரப்பில் ஒத்துக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
மேலும், வைகோ எதிர்பார்க்கும் சில தொகுதிகளை பெறுவதிலும் சிக்கல் நீடிப்பதாகச் சொல்கிறார்கள். இன்னொரு பக்கம், பாஜக தலைவர்கள் சிலர் திமுக-வுக்கும் கூட்டணி தூது அனுப்பிக் கொண்டிருப் பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுபோன்ற செய்திகளால் மன வருத்தம் அடைந்துதான் மோடி கூட்டத்தில் மேடை ஏறுவதை வைகோ தவிர்த்துவிட்டதாகச் சொல் கிறார்கள்.
இந்த நிலையில் தமிழக பாஜக தரப்பிலிருந்து நேற்று மதிமுக மேல்மட்ட தலைவர்களைத் தொடர்புகொண்டு பேசிய வர்கள், ‘’அவசரப்பட்டு வைகோ எந்த முடிவுக்கும் வரவேண்டாம். பாஜக கூட்டணியில் மதிமுக-வுக்கு உரிய மரியாதை அளிக்கப்படும். மோடி கூட்டத்துக்கு வைகோவும் வரவேண்டும்.
அப்படி அவரால் வரமுடியாமல் போனா லும் மோடியை தனியே சந்தித்துப் பேசுவதற்கு ஏற்பாடு செய்கிறோம்’’ என்று சொன்னார் களாம். இந்தத் தகவல் உடனடியாக வைகோவுக்கு தெரிவிக்கப்பட்டதற்கு, ‘’அப்படியா சொன்னார்கள்?’’ என்று மட்டும் கேட்டுவிட்டு அமைதியாகிவிட்டாராம் வைகோ.
இதையடுத்து இன்று சென்னையில் மோடி- வைகோ சந்திப்பு நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.