

‘தி இந்து’ மற்றும் க்ரடாய் அமைப்பு ஏற்பாட்டில் ‘லிவிங் ஸ்பேஸஸ் 2016’ என்ற பெயரிலான வீடு விற்பனைக் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. இந்த 2 நாள் கண்காட்சி இன்றும் நடக்கிறது.
‘தி இந்து - பிராபர்ட்டி பிளஸ்’, ‘தி இந்து - சொந்த வீடு’ மற்றும் க்ரடாய் (இந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பு) ஏற்பாடு செய்துள்ள ‘லிவிங் ஸ்பேஸஸ் 2016’ என்ற வீடு விற்பனைக் கண்காட்சி நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. பாங்க் ஆஃப் பரோடா, ரூஃப் அண்ட் ஃப்ளோர் டாட் காம் ஆகியவை இக்கண்காட்சியை இணைந்து வழங்குகின்றன.
இந்த 2 நாள் கண்காட்சியில் 90-க்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. கண்காட்சி ஒருங் கிணைப்பாளரான பிபிசிஎல் நிறுவ னத்தின் நிர்வாக இயக்குநர் அனந்த் உம்மிடி, எலெக்ட் நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.எஸ்.ஹபிப் ஆகியோர் க்ரடாய் அமைப்பின் சென்னை பிரதிநிதிகளாகப் பங் கேற்று கண்காட்சியை தொடங்கி வைத்தனர். கண்காட்சி தொடக்க விழாவுக்கு ‘தி இந்து’ குழுமத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ராஜீவ் சி.லோச்சன் முன்னிலை வகித்தார்.
தொடக்க நாளான நேற்று பிபிசிஎல், ஹிருதாணி, கோல்டன் ஹோம்ஸ், அசோக் குரூப், காஸா கிரான்ட் உட்பட 97 கட்டுமான நிறு வனங்கள் மற்றும் வங்கிகள் தனித் தனியாக அரங்குகளை அமைத் திருந்தன. அடுக்குமாடி குடியிருப்பு கள், ட்யூப்ளக்ஸ் வீடுகள், சிறிய பட்ஜெட் வீடுகள், வணிக பயன் பாட்டுக்கானவை என பல்வேறு விதமான கட்டிடங்கள் குறித்து கண்காட்சியில் கலந்துகொண்ட நிறுவனங்கள் பார்வையாளர் களிடம் விளக்கினர். ரூ.5 லட்சம் முதல் ரூ.5 கோடி வரையிலான விலைமதிப்பில் உள்ள குடியிருப்பு கள் கண்காட்சியில் இடம்பெற்றன.
பாங்க் ஆஃப் பரோடா, பாரத ஸ்டேட் வங்கி உட்பட 5 வங்கிகள் கண்காட்சியில் பங்கேற்றுள்ளன. வீட்டுக்கடன் வாங்குவது, தவணை முறைகள் குறித்து அந்த வங்கி அலு வலர்கள் பார்வையாளர்களிடம் விளக்கினர்.
‘லிவிங் ஸ்பேஸஸ் 2016’ கண் காட்சியின் ஒருங்கிணைப்பாளர் அனந்த் உம்மிடி ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘க்ரடாய் மற்றும் ‘தி இந்து’வின் முயற்சியில் ஏற் பாடு செய்யப்பட்டுள்ள இக்கண் காட்சியில் 90-க்கும் அதிகமான நிறுவனங்கள் தங்களது வீடு, பங்களா, அடுக்குமாடி குடி யிருப்பு விற்பனை தொடர்பாக பார்வையாளர்களுடன் கலந் துரையாடல் செய்கின்றன. மக்களின் மாபெரும் நம்பிக்கையைப் பெற்ற நிறுவனமான ‘தி இந்து’, க்ரடாய் அமைப்புடன் இணைந்து இக்கண்காட்சியை நடத்துவதுதால், ஏராளமான பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு வருகின்றனர். வீடு வாங்குவதற்கு நாட்டிலேயே மிகப்பெரிய அளவில் நடத்தப் படும் இக்கண்காட்சி சென்னைவாசி களுக்கு மிகப்பெரிய வரப் பிரசாதம்’’ என்றார்.
எலெக்ட் நிறுவன தலைவரும், க்ரடாய் அமைப்பின் சென்னை பிரதிநிதியுமான டபிள்யூ.எஸ்.ஹபிப் கூறியபோது, ‘‘வர்த்தகம் என்னும் நோக்கத்தை தாண்டி சேவை மனப்பான்மையுடன் ‘லிவிங் ஸ்பேஸஸ் 2016’ கண்காட்சி நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு நடந்த கண்காட்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். இந்த ஆண்டும் அதிக அளவில் வந்தவண்ணம் உள்ளனர். பணக் காரர்கள் மட்டும்தான் சொந்த வீட்டில் இருக்க வேண்டும் என்று இல்லை. எளிய, நடுத்தர வர்க்க மக்களும் வீடுகளை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கில், வீட்டுக்கடன் ஏற்பாடு செய்ய வங்கிகளும் கண்காட்சியில் கலந்துகொண்டுள்ளன’’ என்றார்.
‘தி இந்து’ குழுமம் சார்பிலான அரங்கம் ஒன்றும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது. அங்கு ‘தி இந்து’ குழும நாளிதழ்கள், புத்தகங்கள் பார்வைக்கு வைக் கப்பட்டிருந்தன. ‘தி இந்து’ குழும பத்திரிகைகளின் சந்தா புதுப்பிப்பது, புதிய சந்தாதாரராக இணைவது போன்ற சேவைகள் அங்கு வழங்கப்பட்டன.
நேற்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்த கண்காட்சியில் நூற்றுக்கணக்கான பொதுமக்களும், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருபவர்களும் பங்கேற்றனர். நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இந்த 2 நாள் கண்காட்சி இன்றும் நடக்கிறது.