திருவொற்றியூரில் சிபிசிஎல் சார்பில் எண்ணெய் குழாய் பதிக்கும் பணி தொடக்கம்: பொதுமக்கள் போராட்டத்தால் உடனே நிறுத்தம்

திருவொற்றியூரில் சிபிசிஎல் சார்பில் எண்ணெய் குழாய் பதிக்கும் பணி தொடக்கம்: பொதுமக்கள் போராட்டத்தால் உடனே நிறுத்தம்
Updated on
1 min read

சிபிசிஎல் நிறுவனம் சார்பில் கச்சா எண்ணெய் குழாய் பதிக்கும் பணி திருவொற்றியூரில் நேற்று தொடங்கப்பட்டது. இதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் நிறுத்தப்பட்டன.

சென்னை துறைமுகத்தில் இருந்து மணலியில் உள்ள சிபிசிஎல் (சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன்) நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத் துக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் வகையில் புதிதாக குழாய்கள் அமைக்க சிபிசிஎல் திட்டமிட்டுள்ளது. இதற்காக கடலோரப் பகுதியில் சுமார் 17 கி.மீ. நீளத்துக்கு குழாய்கள் பதிக்கப்பட உள்ளன. சுமார் 22 மீனவ கிராமங்கள் வழியாக இந்த குழாய்கள் பதிக்கப்படுகின்றன. இதை எதிர்த்து பல்வேறு மீனவ அமைப்புகள் கடந்த 3 மாதங்களாகப் போராடி வருகின்றன.

இந்நிலையில், மீனவ மக்களின் எதிர்ப்பையும் மீறி, திருவொற்றியூர் பகுதியில் குழாய்களை பதிப்பதற் கான பூமி பூஜை நேற்று நடத்தப்பட்டது. இதை அறிந்த மீனவ மக்கள், குழாய் பதிக்கும் பணியைக் கைவிடுமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களுடன் போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தினர். பணிகள் நிறுத்தப்பட்டதாக சிபிசில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

கருத்து கேட்பு கூட்டம்

வடசென்னை கடலோர சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெ.கோசு மணி கூறியதாவது:

ஏற்கெனவே கப்பல்கள் மோதிக் கொண்ட விபத்தில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு, அதை அப்புறப் படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் பெரிதும் அவதிப்பட்டன. மீனவர்களின் வாழ்வாதாரமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இப்பகுதியில் எண்ணெய்க் குழாய்களைப் பதிக்க முயற்சி நடக்கிறது. அந்தக் குழாய்களில் இருந்து எண்ணெய்க் கசிவு ஏற்படாமல் தடுக்கும் வகை யில், எந்த அளவுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படு கின்றன என்பது குறித்து பொது மக்களிடம் முதலில் விளக்க வேண்டும். இதற்காக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண் டும். சிபிசிஎல் கூறும் விளக்கம் ஏற்கத்தக்கதாக இருந்தால், குழாய் பதிக்க அனுமதிப்போம். இல்லாவிட்டால், இத்திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம். எங்களது இந்தக் கருத்தை சிபிசிஎல் நிறுவனத்திடம் தெரிவித்தோம். அவர்களும் ஏற்றுக்கொண்டு, பணிகளை நிறுத்தியுள்ளனர். நாங்களும் போராட்டத்தைக் கைவிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in