

வேளச்சேரியில் பிரபலமான ஐ.டி நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனத்துக்கு நேற்று காலை இ-மெயில் ஒன்று வந்தது. அதில், “டெல்லி விமான நிலையத்தை குண்டு வைத்து தகர்க்க உள்ளோம். மார்ச் 30-ம் தேதியிலிருந்து ஏப்ரல் 10-ம் தேதிக்குள் குண்டு வெடிக்கும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஐ.டி நிறுவன அதிகாரிகள் இதுபற்றி வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உடனடியாக மிரட்டல் குறித்து சென்னை காவல் ஆணையர் கரன் சின்ஹாவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.