பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாகக் கூறி பணமோசடி தொடர்பாக 177 புகார்

துரிதமாக விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு
பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாகக் கூறி பணமோசடி தொடர்பாக 177 புகார்
Updated on
1 min read

சென்னை: தனி​யார் பள்​ளி​களுக்கு நிரந்தர அங்​கீ​காரம், நகர் ஊரமைப்​பு, சென்னை பெருநகர வளர்ச்​சிக் குழு​மத்​தின் திட்ட அனு​மதி உள்​ளிட்ட பிற சட்​டப்​பூர்​வ​மான அனு​ம​தி​களைப் பெற்​றுத்​தரு​வ​தாகக் கூறி தமி​ழ​கம் முழு​வதும் தனி​யார் பள்ளி நிர்​வாகி​களிட​மிருந்து ரூ.100 கோடிக்​கும் மேல் பணம் மோசடி செய்​த​தாக தமிழ்​நாடு பெற்​றோர் ஆசிரியர் சங்​கத் தலை​வர் பி.டி.அரசக்​கு​மார் உள்​ளிட்ட நிர்​வாகி​கள் மீது சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​துள்​ளனர்.

இந்த வழக்​கில் அரசக்​கு​மார் குண்​டர் தடுப்​புச்​சட்​டத்​தின் கீழ் சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார். இந்த வழக்கில் தேடப்​பட்டு வரும் தமிழ்நாடு தனி​யார் பள்​ளி​கள் சங்​கப்பொருளாள​ரும், முன்னாள் எம்​எல்​ஏ-வு​மான முத்​துக்​கு​மார், முன்​ஜாமீன் கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

இந்த மனு நீதிபதி வி.லட்​சுமி நாராயணன் முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் தரப்​பில், “இந்த மோசடி வழக்கில் இது​வரை 177 புகார்​கள் வந்துள்​ளன.

அது தொடர்​பாக விசா​ரணை நடந்து வரு​கிறது. முன்​ஜாமீன் கோரும் இந்த மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்​டும்” எனக் கோரப்​பட்​டது. அதையேற்ற நீதிப​தி, பெறப்​பட்​டுள்ள புகார்​கள் மீது துரித​மாக விசா​ரணை நடத்த வேண்​டும் என அறி​வுறுத்​தி, முன்ஜாமீன் கோரும் இந்த மனுவுக்கு போலீ​ஸார் பதிலளிக்க உத்​தர​விட்டு வி​சா​ரணையை இன்​றைக்கு (செப்​.10) தள்​ளி​வைத்​துள்​ளார்.​

இதற்கிடையே முத்துக்குமார் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாகக் கூறி பணமோசடி தொடர்பாக 177 புகார்
முதல்வர் விஜய்யின் பேச்சை கண்டித்து செப்.12-ல் திமுக ஆர்ப்பாட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in