

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் ஜி.கே.வாசன் கோஷ்டிக்கும் ப.சிதம்பரம் கோஷ்டிக்கும் இடை யில் நடக்கும் அதிகார யுத்தம் உச்சத்தை எட்டிக் கொண்டிருக் கிறது.
ஒரு காலத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் வாசனின் ஆதரவாளர்கள்தான் அதிகமான அளவில் முக்கியப் பொறுப்புகளில் இருந்தார்கள். ஆனால், இப்போது ப,சிதம்பரம் அணிக்கும் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டத் தலைவர்கள் இருக்கிறார்கள்.
இந்நிலையில், மாநிலத் தலைவர் பதவியைப் பிடிக்க சிதம்பரமும் வாசனும் களத்தில் இறங்கியுள்ளார்கள். ஆனால், தன்னைச் சந்திக்க வரும் நபர்களிடம் தனக்கு மாநிலத் தலைவராகும் எண்ணம் எல்லாம் இல்லை என்று சொல்லி வருகிறார் சிதம்பரம். அதே சமயம், வாசனுக்கு மாநிலத் தலைவர் பதவி கொடுக்காவிட்டால் மறு படியும் த.மா.கா. உருவாவதை தடுக்க முடியாது என்று அவரது ஆதரவாளர்கள் மறைமுகமாக தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், செப்டம்பர் 30-ம் தேதி சத்தியமூர்த்தி பவனில் காமராஜரின் முழு உருவச் சிலையும் சத்திய மூர்த்தியின் இடுப்பளவு சிலையும் திறப்பதற்கான வேலைகளில் மும்முரமாய் இருக்கிறது வாசன் கோஷ்டி. நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, உம்மன் சாண்டி கலந்து கொள்ளும் இந்த விழாவுக்கு சிதம்பரத்துக்கும் அழைப்பு அனுப்பி இருக்கிறார்கள்.
இதனிடையே, சிலை திறப்பு விழாவுக்கு முன்பாக தங்களது படையை திரட்டிக் காட்ட தீர்மானித்த சிதம்பரம் கோஷ்டி, இன்று (செப்டம்பர் 22) சென்னை, காமராஜர் அரங்கில் தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சி ஊழியர் கூட்டத்தை கூட்டி இருக்கிறது. சிதம்பரம் ஆதரவாளரான தென் சென்னை மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன் இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.
சிதம்பரம் ஆதரவு மாவட்டத் தலைவர்கள் அனைவரும் ஆட் களைத் திரட்டிக்கொண்டு வர வேண்டும் என உத்தரவுகள் பறந் திருப்பதாகச் சொல்கிறார்கள். பொதுவாக இதுபோன்ற கூட்டங் கள் நடக்கும் போது மாநிலத் தலைமையிடம் ஒப்புதல் பெறுவது வழக்கம். ஆனால், இந்தக் கூட்டத்துக்கு தலைமையிடம் எந்த ஒப்புதலும் கேட்கவில்லையாம்.