பிரபல சமையல் கலைஞர் அறுசுவை அரசு’ நடராஜன் காலமானார்

பிரபல சமையல் கலைஞர் அறுசுவை அரசு’ நடராஜன் காலமானார்
Updated on: 
1 min read

பிரபல சமையல் கலைஞரும், அறுசுவை அரசு கேட்டரர்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான என்.நடராஜன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 92.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள விக்கிரவாண்டியம் கிராமத்தில் பிறந்தவர் நடராஜன். 8 வயதிலேயே சமைக்கத் தொடங்கிய அவர், 21 வயதில் சென் னைக்கு வந்து, சமையல் கலை ஞராக வாழ்க்கையை தொடங்கி னார்.

அவரது சமையலில் மனதைப் பறிகொடுத்த முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி, அவருக்கு ‘அறுசுவை அரசு’ என்ற பட்டத்தை வழங்கிப் பாராட்டினார். பின்னர், அதுவே அவரது அடையாளமாக மாறியது.

இதுவரை 25 ஆயிரத்துக்கும் அதிகமான திருமணங்களில் அவ ரது அறுசுவை அரசு கேட்டரர்ஸ் நிறுவனம் சமைத்துக் கொடுத்துள் ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட பல தலைவர்களால் பாராட்டப்பட்டவர் நடராஜன்.

காலமான ‘அறுசுவை அரசு’ நடராஜனுக்கு 3 மகன்கள், 5 மகள்கள் உள்ளனர். அவரது இறுதிச் சடங்குகள் சென்னை மேற்கு மாம்பலத்தில் இன்று நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in