

மதுரையில் பாடநூல் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏதுமில்லை என மாவட்ட கல்வி அதிகாரி சுபாஷினி தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 பாடப் புத்தகத்தில் தமிழ் மொழிப் புத்தக அட்டையில் பாரதியார் தலைப்பாகையில் காவி நிறம் தீட்டப்பட்டிருப்பது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பினோம்.
இது முழுக்க முழுக்க தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விஷயம் இதில் நான் கருத்து சொல்ல ஒன்றுமில்லை. இப்படி ஒரு சர்ச்சையானதே எனது கவனத்துக்கு வரவில்லை என்றார்.
மதுரையில் பாடநூல் விநியோகம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு, பாடநூல் விநியோகம் சீராக நடைபெற்றுவருகிறது. 3,4,5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு மட்டுமே பாடநூல்கள் வரவேண்டி உள்ளனவே தவிர மற்ற வகுப்புகள் அதுவும் குறிப்பாக உயர் வகுப்புகளில் எவ்வித சிக்கலும் இல்லை.
லேப்டாப் உள்ளிட்ட அரசாங்கம் வழங்கும் 14 வகையான பள்ளி உபகரணங்களும் சீராக விநியோகிக்கப்பட்டு வருகின்றன என்றார்.