புழுதிவாக்கம் ரயில் நிலைய லிப்டில் சிக்கிய 17 பேர் மீட்பு: ரயில்வே அவசர எண் இயங்கவில்லை என குற்றச்சாட்டு

புழுதிவாக்கம் ரயில் நிலையத்தில் உள்ள மின்தூக்கியில் சிக்கி தவித்த 17 பேரை தீயணைப்பு படை வீரர்கள் 2 மணி நேரம் போராடி மீட்டனர்.

புழுதிவாக்கம் ரயில் நிலையத்தில் உள்ள மின்தூக்கியில் சிக்கி தவித்த 17 பேரை தீயணைப்பு படை வீரர்கள் 2 மணி நேரம் போராடி மீட்டனர்.

Updated on
1 min read

சென்னை: ஆதம்​பாக்​கம் பகு​தி​யில் வசிப்​பவர் சங்​கர். இவரது மனைவி சாந்​தி. இவர்​கள் இரு​வரும் நேற்​று ​முன்​தினம் திரு​வல்​லிக்​கேணி​ சென்​றனர். பின்​னர், அங்​கிருந்து பறக்​கும் ரயில் மூலம், ஆதம்​பாக்​கம் அருகே அமைந்​துள்ள புழுதிவாக்கம் ரயில் நிலை​யத்​துக்கு இரவு 9:30 மணிக்கு வந்​தனர்.

அங்​கிருந்து இரு​வரும் மின் தூக்கி (லிஃப்ட்) மூல​மாக கீழே இறங்க முடிவு செய்​தனர். அங்கு ஏற்​கெ​னவே, 15 பேர் காத்திருந்​தனர். அவர்​கள் அனை​வரும் மின்​தூக்கி வந்​தவுடன் அதில் ஏறினர்.

மின்​தூக்கி புறப்​பட்ட சில நொடி​யில் 2-வது மாடிக்​கும் - முதல் மாடிக்​கும் இடையே பாதி​யிலேயே நின்​றது. இதில் பயணம் செய்த 17 பேரும் சிக்​கித் தவித்​தனர். மேலும், உதவி கேட்டு குரல் எழுப்​பினர்.

இருப்​பினும் யாரும் வரவில்​லை. இதையடுத்​து, தெற்கு ரயில்வே நிர்​வாகத்​துக்​கும், மின் தூக்​கி​யில் ஒட்​டப்​பட்​டிருந்த அவசர உதவி எண்​ணுக்​கும் தொடர்ந்து தொடர்பு கொள்ள முயற்சி செய்​தனர். ஆனால், எந்​த​வித உதவி​யும் கிடைக்​க​வில்​லை.

இதைத் தொடர்ந்​து, சங்​கர் செல்​போன் மூல​மாக, தனது நண்​பரை அழைத்து அவர் மூலம் காவல்​துறை அவசர உதவிக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரி​வித்​தார்.

இதன்​பேரில், அடுத்த 15 நிமிடத்​தில், வேளச்​சேரி தீயணைப்பு மற்​றும் மீட்பு பணி நிலைய அதிகாரி பிர​பாகரன் தலை​மையி​லான 5 தீயணைப்பு மற்​றும் மீட்பு பணி வீரர்​கள் புழு​தி​வாக்​கம் ரயில் நிலை​யத்​துக்கு வந்​தனர்.

பின்​னர், நீண்ட போராட்​டத்​துக்​குப் பின், தீயணைப்பு துறை வீரர்​கள் 2-வது தளத்​தில் உள்ள மின்​தூக்கி நுழை​வு வா​யிலை திறந்​து, அதன் வாயி​லாக மின் தூக்கி மேற்​பகு​திக்கு சென்​று, அதில் பொருத்​தப்​பட்​டிருந்த மின்​விசிறியை அகற்​றினர்.

பின்னர், அதன் வழி​யாக முதலில் 4 குழந்​தைகளை மிக​வும் பத்​திர​மாக மீட்​டனர். பின்னர் மற்ற 13 பேரை​யும் மீட்​டனர். இதுகுறித்​து, ரயில் பயணி​கள் கூறுகை​யில், “தெற்கு ரயில் ​வே​யின் அவசர எண்​ணுக்கு தொடர்பு கொண்​டாலும் எந்த பதி​லும் இல்​லை.

மின்​தூக்​கி​யில் ஒட்​டப்​பட்ட உதவி எண்​ணும் இயங்​க​வில்​லை. சிறிது தாமதம் ஏற்​பட்டு இருந்​தால் கூட விபரீதம் ஏற்​பட்​டிருக்​கும். ரயில்வே நிர்​வாகம் இனிமேலா​வது கவன​மாக செயல்​பட​வேண்​டும். ரயில் நிலை​யத்​தில் பயணி​களின் அடிப்​படை வசதி​களை முறை​யாக பராமரிக்க வேண்​டும்.

அப்​போது தான் இது​போன்ற பிரச்​சினை ஏற்​ப​டா​மல் தவிர்க்க முடி​யும்” என்​றனர். இதுகுறித்​து, சென்னை ரயில்வே கோட்ட அதி​காரி​யிடம் கேட்​ட​போது, ``மின்​தூக்கி தான் பிரச்​சினை.

இதை பராமரிக்​கும் தனி​யார் நிறு​வனத்​துக்கு தகவல் கொடுக்​கப்​பட்​டுள்​ளது. விரை​வில் இப்​பிரச்​சினைக்கு தீர்வு காணப்​படும்'' என்​றார்.

<div class="paragraphs"><p>புழுதிவாக்கம் ரயில் நிலையத்தில் உள்ள மின்தூக்கியில் சிக்கி தவித்த 17 பேரை தீயணைப்பு படை வீரர்கள் 2 மணி நேரம் போராடி மீட்டனர்.</p></div>
நீர் மேலாண்மை ஆய்வு மையத்துக்கு ரூ.5 கோடி நிதி: ஐஐடி முன்னாள் மாணவர் வழங்கினார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in