உரிமையியல் வழக்குகளில் தமிழக அரசுக்காக ஆஜராகி வாதிட 17 அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

உரிமையியல் வழக்குகளில் தமிழக அரசுக்காக ஆஜராகி வாதிட 17 அரசு வழக்கறிஞர்கள் நியமனம்
Updated on
1 min read

சென்னை: உரிமை​யியல் வழக்​கு​களில் தமிழக அரசுக்​காக ஆஜராகி வாதிட ஏது​வாக 17 அரசு வழக்​கறிஞர்​களை நியமித்து தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழக அரசு தரப்​பில் உரிமை​யியல் வழக்​கு​களில் ஆஜராகி வாதிடும் வகை​யில் சென்னை உயர் நீதி​மன்​றம் மற்​றும் உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் தற்​காலிக அடிப்​படை​யில் 17 பேரை அரசு வழக்​கறிஞர்​களாக நியமித்து தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

அதன்​படி, அரசு தலைமை வழக்​கறிஞர் விஜய் நாராயண் பரிந்​துரை​யின்​பேரில் சென்னை உயர் நீதி​மன்​றத்​துக்கு அரசு வழக்​கறிஞர்​களாக ஆர்​.க​வுரி, ஜி. தன மாத்​ரி, முகமது பயாஸ் அலி, எம்​.சிவவர்த்​தனன், எம்.குருபிர​சாத், அமிர்த பூங்​கொடி தினகரன், கே.சதீஷ், கே.சுரேந்​தர், டோமினிக் எஸ்​.டே​வி்ட், ஆர்.சக்​கர​வர்த்தி ஆகியோர் மாநில அரசு ப்ளீடர்​கள் என்ற அந்​தஸ்​தில் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

இதே​போல உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் அரசு வழக்​கறிஞர்​களாக பி.சர​வணன், எம்​.பி.செந்​தில், ஆர். பார்த்​திபன், ஐ.பினய்​காஷ், எஸ்​.சிவசுப்​ரமணி​யன், எஸ்​.சிவ​தில​கர், கே.பொற்​கொடி ஆகியோர் அரசு ப்ளீடர்​கள் என்ற அந்​தஸ்​தில் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

அரசு வழக்​கறிஞர்​கள் நியமன விதி​களின்​படி நிரந்தர அரசு வழக்​கறிஞர்​கள் முறை​யாக நியமிக்​கப்​படும் வரை இவர்​கள் அரசு சார்​பில் ஆஜராகி வாதிடு​வர் என தமிழக அரசின் பொதுத்​துறை முதன்​மைச் செயலர் ரீட்டா ஹரிஷ் தாக்​கர் உத்​தர​விட்​டுள்​ளார்.

உரிமையியல் வழக்குகளில் தமிழக அரசுக்காக ஆஜராகி வாதிட 17 அரசு வழக்கறிஞர்கள் நியமனம்
பக்தர்களின் கூட்ட நெரிசலை குறைக்க முதுநிலை கோயில்களில் நேர ஒதுக்கீட்டு முறை: சோதனை அடிப்படையில் நடவடிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in