

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் ஏரியாவில் சரவணப் பொய்கைக்குப் பக்கத்தில் தேர்தல் காரியாலயம் போட்டிருந்தார். இந்த முறை அந்த இடத்தைத் தனக்காக பிடித்துக் கொண்டார் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன். “முருகனுக்குப் பக்கத்துல காரியாலயம் இருக்கது நல்லதுதானே...” என்று கண் சிமிட்டும் கழக கண்மணிகள், “எல்லாம் வாஸ்து படுத்தும் பாடு” என்று போகிற போக்கில் ஒரு ‘பிட்’டையும் போட்டுவிட்டுப் போடுகிறார்கள்.