

மு.க.அழகிரி வெளியில் மூச்சுவிடாமல் இருந்தாலும், உள்ளுக்குள் தனது நண்பர்களோடு உட்கார்ந்து அடிக்கடி அரசியல் பேசுகிறாராம்.
கடந்த வாரம் நெல்லைக்குப் போய்விட்டுத் திரும்பியவர், வீட்டில் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, “மீடியாக்காரங்கள எல்லாம் சபரீசன வெச்சு சரிபண்ணி வெச்சுக்கிட்டு ‘திமுகதான் பெருவாரியா ஜெயிக்கும்’னு பேச வைக்கிறாங்க.
ஆனா, உண்மை நிலவரம் என்னன்னு அவங்களுக்குத் தெரியல, எனக்குத் தெரிஞ்சு தென் மாவட்டங்கள்லயே தூத்துக்குடியும், திருநெல்வேலியும்தான் திமுக கூட்டணி ஜெயிக்கும். மத்த இடங்கள்ல மண்ண கவ்வப் போகுது பாருங்க” என்று சொன்னாராம்.