

மதுரையில் காலை 11 மணி நிலவரப்படி 25.41% வாக்குகள் பதிவாகியுள்ளது.
மதுரை டி.வி.எஸ். நகர் தனியார் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வாக்களித்தார்.
மதுரை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன் பசுமலையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் ஹார்விப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை வில்லாபுரத்தில் உள்ள துர்கா பள்ளியில் வாக்களித்தார்.
மதுரையில் சித்திரைத் திருவிழாவை ஒட்டி மாலை 8 மணி வரை வாக்களிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது. காலையில் தேரோட்டம் காரணமாக வாக்குப்பதிவு சற்றே மந்தமாக இருந்தாலும் நேரம் செல்லச் செல்ல வாக்குப்பதிவு சூடுபிடித்து வருகிறது.