ஆசிய தடகளப் போட்டி: தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து

ஆசிய தடகளப் போட்டி: தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து
Updated on
1 min read

ஆசிய தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்திருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து.

ஆசிய தடகளப் போட்டிகள் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இதில் திங்கட்கிழமை நடந்த  800 மீட்டர் மகளிருக்கான ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கத்தை வென்றார். கோமதி 800 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 70 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார்.

இதன் மூலம் 2019 ஆம் ஆண்டு ஆசிய தடகளப் போட்டியில் இந்தியா பெற்ற முதல் தங்கம் இதுவாகும்.தங்கப்பதக்கம் வென்ற கோமதிக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மேலும்  ஈட்டி எறிதலில் இந்தியாவின் ஷிவ்பால் சிங் 86.23 மீட்டர் வீசி  வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இந்தியா இதுவரைஆசிய தடகளப் போட்டியில் ஒரு தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.  

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in