தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்: ஜாபர்சேட் சிபிசிஐடி டிஜிபியாக நியமனம்

தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்: ஜாபர்சேட் சிபிசிஐடி டிஜிபியாக நியமனம்
Updated on
1 min read

தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 7 காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் வரத் தொடங்கியுள்ளது. முதல் மாற்றமாக 6 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 7 காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்ட ஜாபர்சேட் சிபிசிஐடி டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். மேற்கண்ட மாற்றத்திற்கான உத்தரவை உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.

மாற்றப்பட்டவர்கள் முன்னர் வகித்த பதவி விவரங்கள்:

1. தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் டிஜிபி மற்றும் திட்ட அலுவலராகப் பதவி வகித்த ஜாபர்சேட் சிபிசிஐடி டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

2. சிபிசிஐடி ஏடிஜிபியாக பதவி வகித்த அம்ரேஷ் புஜாரி போலீஸ் அகாடமி ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

3. சென்னை போலீஸ் போக்குவரத்துக்கழக சிறப்பு அதிகாரியாகப் பதவி வகித்த சு.அருணாச்சலம் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

4. உத்தரப் பிரதேசத்திலிருந்து அயல் பணியில் தமிழகம் வந்துள்ள எஜிலியர்சேன் சென்னை நிர்வாகப் பிரிவு டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்

5. உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாகப் பதவி வகிக்கும் சோனல் சந்திரா பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

6. தமிழ்நாடு கமாண்டோ படை ஏ.எஸ்.பி. வருண் குமார் எஸ்.பி.யாகப் பதவி உயர்த்தப்பட்டு உணவுக்கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

7. தேனி மாவட்ட காவல் தலைமையிடக் கூடுதல் எஸ்.பி. பழனிகுமார் எஸ்.பி.யாக பதவி உயர்த்தப்பட்டு பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப்பிரிவு எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in