நடப்பாண்டு சீசன் முடிவு: தூத்துக்குடி மாவட்டத்தில் 16 லட்சம் டன் உப்பு தேக்கம்

தூத்துக்குடி பகுதியில் உள்ள உப்பளங்களில் தேங்கியுள்ள உப்பு குவியல்களை பிளாஸ்​டிக் ஷீட் போட்டு மூடி வைத்​துள்​ள உற்பத்தியாளர்கள். படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி பகுதியில் உள்ள உப்பளங்களில் தேங்கியுள்ள உப்பு குவியல்களை பிளாஸ்​டிக் ஷீட் போட்டு மூடி வைத்​துள்​ள உற்பத்தியாளர்கள். படம்: என்.ராஜேஷ்

Updated on: 
2 min read

தூத்துக்குடி: தூத்​துக்​குடி மாவட்​டத்​தில் நடப்பு ஆண்​டுக்​கான உப்பு சீசன் முடிவுக்கு வந்​துள்​ளது. சுமார் 20 லட்​சம் டன் உப்பு உற்​பத்​தி​யான நிலை​யில், அதில் 16 லட்​சம் டன் உப்பு விற்​பனை​யா​காமல் தேங்​கி​யுள்​ள​தாக உற்​பத்​தி​யாளர்​கள் தெரி​வித்​தனர்.

தூத்​துக்​குடி மாவட்​டத்​தில் வேம்​பார், தூத்​துக்​குடி, முத்​தை​யாபுரம், முள்​ளக்​காடு, ஆறு​முகநேரி பகு​தி​களில், 20 ஆயிரம் ஏக்​கரில் உப்​பளங்​கள் உள்​ளன. இவற்​றில் சுமார் 30 ஆயிரம் தொழி​லா​ளர்​கள் பணி​யாற்​றுகின்​ற​னர். நாட்​டின் உப்பு உற்​பத்​தி​யில் குஜ​ராத் மாநிலத்​துக்கு அடுத்​த​படி​யாக தூத்​துக்​குடி மாவட்​டம் உள்​ளது.

இங்கு ஜனவரி மாதம் உப்பு உற்​பத்​திக்​கான பணி​கள் தொடங்​கும். ஏப்​ரல் முதல் செப்​டம்​பர் வரை​யான 6 மாதங்​கள் உப்பு உற்​பத்​திக்​கான உச்​சகட்ட காலம். அக்​டோபர் மாதம் வடகிழக்கு பரு​வ​மழை தொடங்​கியதும் உப்பு சீசன் முடிவடை​யும்.

நடப்பு ஆண்​டில் எல்​நினோ தாக்​கம் காரண​மாக தூத்​துக்​குடி மாவட்​டத்​தில் மார்ச் மாதம் தொடங்​கி, கடந்த சில நாட்​களுக்கு முன்பு வரை வெயில் உக்​கிர​மாக இருந்​தது. இதனால் உப்பு உற்​பத்தி அதி​க​மாக நடை​பெற்​றது. இந்​நிலை​யில், கடந்த 3 நாட்​களாக பெய்து வரும் மழை மற்​றும் வடகிழக்கு பரு​வ​மழை ஓரிரு நாட்​களில் தொடங்​கும் என்ற எதிர்​பார்ப்பு காரண​மாக, உப்பு உற்​பத்தி சீசன் முடிவுக்கு வந்​துள்​ளது.

கடந்த 7 மாதங்​களாக உற்​பத்தி செய்​யப்​பட்ட உப்பை மழை​யில் இருந்து பாது​காக்​கும் வகை​யில், உப்​பளங்​களில் உள்ள உப்பு குவியல்​களை பிளாஸ்​டிக் ஷீட் போட்டு தொழி​லா​ளர்​கள் மூடி வைத்​துள்​ளனர். வடகிழக்கு பரு​வ​மழை முழு​மை​யாக முடிவடைந்த பிறகே, அடுத்த சீசனுக்​கான பணி​கள் தொடங்​கும்.

இதுகுறித்து தூத்​துக்​குடி சிறிய அளவு உப்பு உற்​பத்​தி​யாளர் சங்க முன்​னாள் செய​லா​ளர் ஏ.ஆர்​.ஏ.எஸ்​.தன​பாலன், ‘இந்து தமிழ் திசை’ செய்​தி​யாளரிடம் கூறிய​தாவது: மாவட்​டத்​தில் நடப்பு ஆண்​டுக்​கான உப்பு உற்​பத்தி முடிவுக்கு வந்​துள்​ளது. கடந்த ஆண்டு மாவட்​டத்​தில் 72 சதவீதம் (18 லட்​சம் டன்) தான் உப்பு உற்​பத்தி இருந்​தது. இந்த ஆண்டு 80 சதவீதம் வரை, அதாவது சுமார் 20 லட்​சம் டன் உப்பு உற்​பத்​தி​யாகி​யுள்​ளது.

ஆனால், சுமார் 4 லட்​சம் டன் உப்பு மட்​டுமே இது​வரை விற்​பனை​யாகி​யுள்​ளது. 16 லட்​சம் டன் உப்பு உப்​பளங்​களி​லேயே தேங்​கி​யுள்​ளது. சில உப்​பளங்​களில் கடந்த ஆண்டு உற்​பத்​தி​யான உப்பு கூட இருப்​பில் உள்​ளது. குஜ​ராத் உப்பு வரு​கை​யால் தூத்​துக்​குடி மாவட்ட உப்​புக்​கான விற்​பனை மார்க்​கெட் வெகு​வாக குறைந்​து​விட்​டது. விலை​யும் குறைந்​துள்​ளது.

கடந்த ஆண்டு இதே காலக்​கட்​டத்​தில் ஒரு டன் உப்பு ரூ.2,500 வரை விலை​போன நிலை​யில், தற்​போது ரூ.1,500-க்​கும் குறை​வாகவே விற்​பனை​யாகிறது. வழக்​க​மாக உப்பு உற்​பத்தி சீசன் ஜனவரி மாதம் தொடங்​கும் நிலை​யில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்​கி​னால் கூட பரவா​யில்​லை. கையிருப்​பில் இருக்​கும் உப்பு கொஞ்​ச​மாவது விற்​பனை​யாகும் என்ற நிலை​யில்​தான்​ உற்​பத்​தி​யாளர்​கள்​ இருக்​கின்​றனர்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

<div class="paragraphs"><p>தூத்துக்குடி பகுதியில் உள்ள உப்பளங்களில் தேங்கியுள்ள உப்பு குவியல்களை பிளாஸ்​டிக் ஷீட் போட்டு மூடி வைத்​துள்​ள உற்பத்தியாளர்கள். படம்: என்.ராஜேஷ்</p></div>
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உடன் முதல்வர் விஜய் சந்திப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in