காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 15.95 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

காஞ்​சிபுரம் மாவட்டத்​துக்​கான வரைவு வாக்​காளர் பட்​டியலை நேற்று வெளி​யிட்​டார்​ மாவட்​ட ஆட்​சியர்​ கலைச்​செல்​வி.

காஞ்​சிபுரம் மாவட்டத்​துக்​கான வரைவு வாக்​காளர் பட்​டியலை நேற்று வெளி​யிட்​டார்​ மாவட்​ட ஆட்​சியர்​ கலைச்​செல்​வி.

Updated on
1 min read

காஞ்சி/செங்கை/திருவள்ளூர்: காஞ்சிபுரம், செங்​கல்​பட்​டு, திரு​வள்​ளூர் மாவட்​டங்​களில் வரைவு வாக்​காளர் பட்​டியல் நேற்று வெளி​யிடப்​பட்​டது. இதன்​படி, இந்த மாவட்​டங்​களில் 15,95,922 வாக்காளர்கள் நீக்​கப்​பட்​டுள்​ளனர்.

காஞ்​சிபுரம் மாவட்ட வரைவு வாக்​காளர் பட்​டியலை மாவட்ட ஆட்​சி​யர் கலைச்​செல்​வி, அரசி​யல் கட்​சிப் பிர​தி​நி​தி​கள் முன்​னிலை​யில் நேற்று வெளி​யிட்​டார். இதன்​படி, மாவட்​டத்​தில் உள்ள ஆலந்​தூர், ஸ்ரீபெரும்​புதூர் (தனி), உத்​திரமேரூர், காஞ்​சிபுரம் ஆகிய 4 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​கள் மொத்​தம் 11 லட்​சத்து 26 ஆயிரத்து 924 வாக்காளர்கள் உள்​ளனர். இவர்​களில் ஆண்​கள் 5,47,393 பேர், பெண்​கள் 5,79,346 பேர், மூன்​றாம் பாலினத்​தவர் 185 பேர். மாவட்​டம் முழு​வதும் 2,74,274 வாக்காளர்கள் பெயர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளன.

அதி​கபட்​ச​மாக ஆலந்​தூர் தொகு​தி​யில் 1.32 லட்​சம் பெயர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளன. வாக்​காளர் வசதிக்​காக புதி​தாக 144 வாக்​குச்​சாவடிகள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன. இதன் மூலம் மாவட்​டத்​தில் மொத்த வாக்​குச்​சாவடிகளின் எண்​ணிக்கை 1,401-லிருந்து 1,545-ஆக உயர்ந்​துள்​ளது.

செங்​கல்​பட்டு மாவட்​டத்​துக்​கான வரைவு வாக்​காளர் பட்​டியலை மாவட்ட ஆட்​சி​யர் தி.சினேகா வெளி​யிட்​டார். இதன்​படி, சோழிங்​கநல்​லூர், பல்​லா​வரம், தாம்​பரம், செங்​கல்​பட்​டு, திருப்​போரூர், செய்​யூர், மது​ராந்​தகம் ஆகிய 7 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களில் மொத்​தம் 20 லட்​சத்து 85 ஆயிரத்து 491 வாக்காளர்கள் உள்​ளனர்.

இவர்​களில் ஆண்​கள் 10,22,756 பேர், பெண்​கள் 10,62,381 பேர், மூன்​றாம் பாலினத்​தவர் 354 பேர். வாக்​காளர் பட்​டியலில் இருந்து மொத்​தம் 7 லட்​சத்து 1,871 வாக்​காளர்​களின் பெயர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளன.

திரு​வள்​ளூர் மாவட்​டத்​துக்​கான வரைவு வாக்​காளர் பட்​டியலை ஆட்​சி​யர் மு.பிர​தாப் வெளி​யிட்​டார். மொத்​தம் 6,19,777 வாக்​காளர்​களின் பெயர்​கள் பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்​டுள்​ளன. அதி​கபட்​ச​மாக மாதவரம் தொகு​தி​யில் 1,09,499 பெயர்​களும், மதுர​வாயல் தொகு​தி​யில் 1,17,368 பெயர்​களும் நீக்​கப்​பட்​டுள்​ளன. ஒட்​டுமொத்​த​மாக மாவட்​டத்​தில் தற்​போது 29,62,449 வாக்காளர்கள் உள்​ளனர்.

<div class="paragraphs"><p>காஞ்​சிபுரம் மாவட்டத்​துக்​கான வரைவு வாக்​காளர் பட்​டியலை நேற்று வெளி​யிட்​டார்​ மாவட்​ட ஆட்​சியர்​ கலைச்​செல்​வி.</p></div>
ஹாங்காங்கிலிருந்து உயர் ரக கஞ்சா கடத்தி வந்த பட்டதாரி இளைஞர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in