ஹாட்லீக்ஸ் :  மய்யம்’ கொண்ட இறுக்கம்!

ஹாட்லீக்ஸ் :  மய்யம்’ கொண்ட இறுக்கம்!
Updated on
1 min read

கெவின்கேர் நிறுவன குழுமத்தைச் சேர்ந்த சி.கே.குமரவேல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கடலூர் - நாகை மண்டல பொறுப்பாளராக இருந்தார். இவரைத்தான் கடலூர் தொகுதியில் கமல் நிறுத்துவார் எனச் செய்திகள் வந்துகொண்டிருந்த நிலையில், மய்யத்திலிருந்து விலகுவதாகக் கடிதம் கொடுத்திருக்கிறார் குமரவேல்.

 “உட்கட்சிப் பூசல் அதிமாக இருக்கிறது அதைக் கொஞ்சம் சரி செய்யுங்கள் என்றேன். ஆனால், கமல்ஹாசன் அதற்குச் சரியான பதில் சொல்லவில்லை. அதனால் கட்சியிலிருந்து விலகிவிட்டேன்” என்கிறார் குமரவேல்.

கெவின்கேர் நிறுவனத்துக்கும் திமுக குடும்பத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அந்த நெருக்கம் கொடுத்த இறுக்கம்தான் குமரவேல் மய்யத்தை மறக்கக் காரணம் என்கிறார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in